பக்கம் எண் :

125

ஆராய்ந்து காயத்திரியது செபிப்பார் - முக்காலத்தினும் மறவாமல் காயத்திரி
மந்திரத்தைத் தெரிந்து ஓதுவார், நாளும் அதிதி பூசைகள் பண்ணுவார் -
எப்போதும் விருந்தினரை ஓம்புவார், யாகாதி கருமங்கள் மந்திர
கிரியாலோபம் இன்றியே செய்துவருவார் - வேள்வி முதலிய தொழில்களை
மந்திரமும் செயலும் குறைவு இல்லாமற் செய்துவருவார், பேராசை
கொண்டிடார் - பேராசை கொள்ளமாட்டார், பெய்யென முகில் பெய்யும் -
(இவர்கள்) பெய் என்று கூறியவுடன் மழை பெய்யும், அவர் மகிமை
எவர்களும் பேசுதற்கு அரிது, அரிது - அவருடைய மேன்மை யாவராலும்
கூற இயலாதது! இயலாதது!


     (வி-ரை.)
காண் : முன்னிலை அசைச்சொல். ஆறு தொழில் : ஓதல்,
ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். (வேட்டல் - வேள்வி
செய்தல். வேட்பித்தல் - வேள்வி செய்வித்தல்.) உதயம் - கதிரவன்
தோன்றும் காலம். உதயாதி என்பது அதற்கும் முற்காலம். ஆகவே,
வைகறை. வைதிகம் வேத சம்பந்தமானது (தத்திதாந்த நாமம்.)

          82. அரசர் சிறப்பு

மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட
     வரும்அதிக ரணவீ ரமும்,
  வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,
     வாசிமத கரியேற் றமும்,
கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,
     கைகண்ட போர்ப்ப டைஞரும்,
  கசரத பதாதியும், துரகப்ர வாகமும்
     கால தேசங்க ளெவையும்
இனிதாய் அறிந்ததா னாபதிக ளொடுசமர்க்
     கிளையாத தளகர்த் தரும்,
  என்றும்வற் றாததன தானிய சமுத்திரமும்,
     ஏற்றம்உள குடிவர்க் கமும்,