பக்கம் எண் :

126

அனைவோரும் மெச்ச இங்கிவையெலாம் உடையபேர்
     அரசராம்! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அருமை ....... தேவனே!, மனுநீதி முறைமையும் - மனுவினால்
ஏற்படுத்தப்பெற்ற அரசநெறி ஒழுங்கும், பரராசர் கொண்டாட வரும் அதிக
ரணவீரமும் - மற்ற மன்னர்கள் புகழுமாறு காணப்படும் சிறந்த போர்
வீரமும், வாள் விசயமொடு சரசசர் தனவிசேடமும் - வாள்கொண்டு
வெற்றிபெறுவதுடன் இனிய முறையிலே தொழிலை முடித்துக்கொள்ளும்
சிறப்பும், வாசி மதகரி ஏற்றமும் - குதிரை யேற்றம் யானையேற்றங்களில்
பயிற்சியும், கனம்ஆம் அமைச்சரும் - பெருமை மிக்க மந்திரிகளும், பலமான
துர்க்கமும் - உறுதியான அரணும், கைகண்ட போர்ப்படைஞரும் - பயிற்சி
பெற்ற போர் வீரரும், கசரத பதாதியும் - யானை தேர் காலாட்களும்,
துரகப்ரவாகமும் - குதிரை வெள்ளமும், காலதேசங்கள் எவையும் இனிதாய்
அறிந்த தானாபதிகளோடு - காலம் இடம் முதலானவற்றையெல்லாம் நன்றாக
உணர்ந்த தானத் தலைவருடனே, சமர்க்கு இளையாத தளகர்த்தரும் -
போர்க்குப் பின்னடையாத படைத்தலைவரும், என்றும் வற்றாத தனதானிய
சமுத்திரமும் - எப்போதும் குறையாத பொன்னும் தானியமும் ஆகிய
பெருக்கும், ஏற்றம் உளகுடிவர்க்கமும் - (வெளிநாட்டில் இருந்தும்) வந்து
சேரும் இயல்புடைய பலவகைக் குடிகளும், இங்கு இவையெலாம்
அனைவோரும் மெச்ச உடைய பேர் அரசர் ஆம் - இங்குக் கூறப்பட்ட
இவற்றையெல்லாம் யாவரும் புகழப் பெற்றவர்களே அரசராவர்.

     (வி-ரை.) இரணம் - புண். புண்படும் வீரம் போர்க்கள வீரம்
வாள்விசயம் - போரில் வெற்றிபெறுதல் (தண்டம்) சரச சாதனம் - சாமபேத
தானங்கள். எனவே நால்வகைச் சூழ்ச்சிகளாயின. அரண் : மதில், நீர், காடு,
மலை என்னும் நால்வகை அரண்கள். ஏற்றம் : மேன்மை யென்பதைவிடக்
(குடி) யேற்றத்தைக் குறிப்பதே சிறப்பாகும்.