83.
வணிகர் சிறப்பு
நீள்கடல்
கடந்திடுவர்; மலையாள மும்போவர்!
நெடிதுதூ ரந்தி ரிந்தும்
நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடி
நீள்நிலத் தரசு புரியும்
வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;
வருமிடம் வராத இடமும்
மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிட
வளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்
ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்
அளவில்பற் பலச ரக்கும்
அமைவுறக் கொள்வர்;விற் பார்கணக் கதிலணுவும்
அறவிடார்; செலவு வரிலோ
ஆளியொத் தேமலையின் அளவும் கொடுத்திடுவர்
அருள் வைசியர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அருமை
........ தேவனே!, அருள் வைசியர் - அருளுடைய
மனத்தவரான வணிகர், நீள் கடல் கடந்திடுவர் - (வணிகத்திற்கு)ப்
பெருங்கடலையும் கடந்து செல்வர், மலையாளமும் போவர் -
மலைநாடுகளையும் சுற்றுவர், நெடிது தூரம் திரிந்தும் நினைவு தடுமாறார்கள்
- நீண்ட தொலைவு அலைந்தாலும் எண்ணத்திலே கலக்கம் அடையார்,
சலியார்கள் - சோர்வு அடையார், பொருள்தேடி நீள் நிலத்து அரவுபுரியும்
வாள் உழவரைத் தமது கைவசம் செய்வார்கள் - பொருளையீட்டி
வைத்துக்கொண்டு பெரிய நாட்டை ஆளும் வாளேந்திய அரசர்களைத் தம்
கையிற் போட்டுக்கொள்வார்கள், வரும் இடம் (உம்) வராத இடமும்
மனத்தையும் அறிந்து உதவி - (பொருள்) வரும் இடத்தையும் வராத
இடத்தையும் (பொருள்வாங்குவோர்) உள்ளத்தையும் தெரிந்து (பொருள்)
கொடுத்து, ஒன்று |
|
|
|