பக்கம் எண் :

128

நூறா ஆயிட வளர்ப்பார் - ஒரு பொருள் நூறாக வளரும்படி யீட்டுவர்,
வரு தொலை தொலைக்கும் ஆள்விடுவர் - (பொருள்) வரக்கூடிய நீண்ட
தொலைவுக்கும் ஆளைச் செலுத்துவர், மலிவு குறைவது விசாரித்திடுவர் -
(பொருள்) மிகுதியையும் குறைவையும் கேட்டறிவர், அளவு இல் பற்பல
சரக்கும் அமைவுறக்கொள்வர் - எல்லை அற்ற பலவகையான
பொருள்களையும் பொருத்தம் அறிந்து வாங்குவர், விற்பார் - விற்பார்கள்,
கணக்கதில் அணுவும் அற விடார் - கணக்கினில் இம்மியும் பிசக விட
மாட்டார்கள், செலவு வரிலோ ஆளி யொத்தே மலையின் அளவும்
கொடுத்திடுவர் - (ஒழுங்கான) செலவு வந்தாலோ சிங்கம் போல அஞ்சாமல்
மலையளவாயினும் செலவழிப்பார்கள்.

     (வி-ரை.) வாள் உழவர் : அரசர், (வாளினாலே தமது முயற்சியைச்
செய்வோர்.)

        84. வேளாளர் சிறப்பு

யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்
     இயற்றிநல் லேர்பெ றுவதும்,
  இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்
     டென்றும்நல் லேர்பெ றுவதும்,
வசனாதி தப்பாது தனதா னியந் தேடி
     வசியர்நல் லேர்பெ றுவதும்,
  மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக
     வளமைபெற் றேர்பெ றுவதும்,
திசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை
     செய்யுநல் லேர்பெ றுவதும்,
  சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்
     செய்யும்மே ழிப்பெ ருமைகாண்
அசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!