(இ-ள்.)
வெள்ளிமலைதனில்
அசையாது மேவி வாழ்கின்ற அண்ணலே
- வெள்ளிமலையில் எப்போதும் பொருந்தி வீற்றிருக்கும் பெரியோனே!,
அருமை ...... தேவனே!, வேதியர் யசனம்ஆதி கருமமும் தப்பாமல் இயற்றி
நல்ஏர் பெறுவதும் -மறையவர் வேள்வி முதலிய தொழில்களைத் தவறாமற்
செய்து பேரழகு பெறுவதும், முடிமன்னர் என்றும் வெற்றிகொண்டு இராச்சிய
பாரம் செய்து நல் ஏர் பெறுவதும் - முடியரசர் எப்போதும் பகைவரை
வென்றிகொண்டு, ஆட்சி புரிந்து பேரழகடைவதும், வசியர் வசனம் ஆதி
தப்பாது தனதானியம் தேடி நல் ஏர் பெறுவதும் - வணிகர் சொல் முதலிய
பிறழாமல் பொன்னும் தானியமும் ஈட்டிப் பேரழகு பெறுவதும், மற்றும் உள
பேரெலாம் மிடி என்றிடாது அதிக வளமை பெற்று ஏர் பெறுவதும் - மேலும்
உள்ள யாவரும் வறுமை என்று கூறாமல் மிக்க வளம் பெற்று அழகுறுவதும்,
திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை செய்யும் நல் ஏர் பெறுவதும் -
எல்லாத் திக்கினும் இருக்கும் பல திருக்கோயில்களும் வழிபாடு பெற்று
நல்லழகு பெறுவதும், சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர்
செய்யும் மேழிப் பெருமை - புகழ் பெற்ற பசிய குவளை மாலை அணிந்த
வேளாளர் புரியும் உழவின் பெருமையாகும்.
(வி-ரை.) யசனம்
- வேள்வி. வைசியர் என்பது வசியர் எனச் செய்யுள்
விகாரம் பெற்றது.
85. தானாபதி,
அமைச்சன், படைத்தலைவன்
தன்னரசன்
வலிமையும், பரராசர் எண்ணமும்,
சாலமேல் வருக ருமமும்
தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்
தானாதி பதியா குவான்;
மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,
வாழ்குடி படைத்தி றமையும்,
மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்
வளமான மதிமந் திரி;
|
|