பக்கம் எண் :

130

துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
     சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,
  தோலாத வெற்றியும் திடமான சித்தியுள
     சூரனே சேனா திபன்
அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!
     அனகனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அன்னையினும் நல்ல மலைமங்கை பங்காளனே - தாயினும்
நல்லருள் புரியும் மலைமகளை யிடப்பாகத்திற் கொண்டவனே!, அனகனே -
தூயவனே!, தன் அரசன் வலிமையும் பரராசர் எண்ணமும் சால மேல்வரு
கருமமும் தான் அறிந்து - தன் அரசனுடைய ஆற்றலும் மாற்றரசர் நினைவும்
நன்றாகப் பின்வரும் அலுவலும் ஆராய்ந்து, அதி புத்தி உத்தி
உண்டாயினோன் தான அதிபதி ஆகுவான் - சிறந்த அறிவும் சூழ்ச்சியும்
பொருந்தியவன் தானைத்தலைவன் எனப்படுவான், மன்னவர் மனத்தையும்,
கால தேசத்தையும், வாழ்குடி படைத் திறமையும், மந்திர ஆலோசனையும்
எல்லாம் - அரசர்களின் கருத்தையும், காலத்தையும், இடத்தையும், வாழ்கின்ற
குடிபடைகளின் ஆற்றலையும், ஆராய்ச்சித் திறனையும், அறிந்தவன் வளமான
மதி மந்திரி - தெரிந்தவன் தேர்ச்சிபெற்ற அறிவுடைய அமைச்சனாவான்,
துன்னிய படைக்குணம் - செறிவான படைகளின் இயல்பும், கரி பரி
பரீட்சையே - யானை குதிரைகளின் தேர்ச்சியும், சூழ்பகைவர் புரி சூழ்ச்சியும்
- சூழந்துள்ள மாற்றலர் செய்யும் சூழ்ச்சியும், தோலாத வெற்றியும் -
பின்வாங்காத வெற்றியும், திடமான சித்தி(யும்) உறுதியான சித்தியும்,
உளசூரனே சேனாதிபன் - உடைய வீரனே படைத்தலைவன் ஆவான்.

     (வி-ரை.) துன்னுதல் - நெருங்குதல். ஆகவே செறிவாயிற்று. சித்தி
- நினைத்தது முடித்தல். சூர் - அச்சம். சூரன் - அஞ்சத்தக்கவன் (வீரன்).