பக்கம் எண் :

131

           86. அரசவைக் கணக்கர்

வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்
     வரவிடுப் போன்ம னதையும்,
  மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்
     வருகர தலாம லகமாய்
விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள
     விடஎழு தவாசிக் கவும்
  வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்
     மேன்மைரா யசகா ரன்ஆம்;
கருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்
     கடிதேற் றிடக்கு றைக்கக்
  கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்
     காட்டுவோன் கருணீ கன்ஆம்;
அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அருஆகி உருஆகி ஒளிஆகி வெளிஆகும் அண்ணலே -
அருவமாகவும், உருவமாகவும், ஒளியாகவும், வெளியாகவும் உள்ள
பெரியோனே!, அருமை .... தேவனே!, வரும் ஓலை உத்தரத்து எழுதிவரு
பொருளினால் - வருகின்ற ஓலையின் புறத்திலே எழுதிவிட்ட பொருளைக்
கொண்டு, வரவிடுப்போன் மனதையும் - ஓலையை விட்டவன் உள்ளத்தையும்,
மருவி வரு கருமமும் - அவன் விரும்பிய தொழிலையும், தேச காலத்தையும்
- இடத்தையும் காலத்தையும், வரு கரதல ஆமலகம் ஆய்விரைவாய் அறிந்து
- உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாக நொடியில் உணர்ந்து, அரசர்
எண்ணில் எண்ணினை அளவு இட எழுத வாசிக்கவும் - அரசருடைய
கருத்தில்