உள்ள கருத்தை
மதிப்பிடவும் எழுதவும் வாசிக்கவும், வெற்றி கொண்டே
பெரிய புத்தியுடையோன் புவியின் மேன்மை ராயச காரன் ஆம் - தேர்ச்சி
பெற்றுப் பேரறிவு உடையோன் உலகிலே பெருமை பெற்ற அரசாங்க
எழுத்தாளன் ஆவான், தொகை வருவாய் அறிந்து ஈராறு நொடியினில்
கடிது ஏற்றிடக் குறைக்க - ஒரு தொகையை மனத்தில் உணர்ந்து பன்னிரு
விநாடியில் விரைவாகக் கூட்டவும் குறைக்கவும், கடுகை ஒரு மலை ஆக
மலையை ஒரு கடுகும் ஆ(க)க் காட்டுவோன் கருணீகன் ஆம் - கடுகை
மலை போலவும் மலையைக் கடுகுபோலவும் ஆக்கிக் காண்பிக்க வல்லவன்
அரசாங்கக் கணக்கன் ஆவான்.
(வி-ரை.) உத்தரம்
- பின். எனவே ஓலையின் புறம். எழுத்தாளரும்
கணக்குப் பார்ப்போரும் கணக்கர் எனவே வழங்கப்படுகின்றனர். ஆமலகம்
- நெல்லி. கரதலாமலகம் என்பது வெளிப்படை என்பதை விளக்கும் உவமச்
சொல். கையில் வைத்திருக்கும் பொருள் தெரிவதைப் போலத் தெளிவித்தல்,
என்பதே அதனால் விளக்கப்படும் பொருள்.
87.
சீற்றத்தின் கொடுமை
கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!
கோபமே குடிகெ டுக்கும்!
கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!
கோபமே துயர்கொ டுக்கும்!
கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!
கோபமே உறவ றுக்கும்!
கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!
கோபமே கருணை போக்கும்!
கோபமே ஈனமாம் கோபமே எவரையும்
கூடாமல் ஒருவ னாக்கும்!
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர
கக்குழி யினில்தள் ளுமால்!
|
|