அவருடைய
தவமாகும் என்றும், இவர்க்குச் சீவன் ஒன்று உடல்வேறு
என்ன - இவர்களுக்கு உயிர் ஒன்று, மெய் மட்டும் வேறு என்றும், சீறு
அரவம் மணி ஐந்தலைவாய் தொறும் - சீறுகின்ற பாம்பின்
மாணிக்கங்களையுடைய ஐந்து தலைகளிலுமுள்ள வாய்தோறும், கூடு உற்ற
இரை எடுத்து ஓர் உடல் நிறைத்திடும் கொள்கைபோல் - கிடைத்த
உணவை யெடுத்து ஒருடலை நிறைக்கின்ற இயற்கைபோலவும், பிரிவே
இன்றி - பிரிவே யில்லாமல், கூடி வாழ்பவர் தம்மையே சகோதரர் எனக்
கூறுவதுவே தருமம் ஆம் - கூடிவாழ்கின்றவர்களையே உடன்பிறந்தோர்
என்று கூறுவது அறமாகும்.
(வி-ரை.) ‘பிரிவு
இன்றியே' என்பதைப் ‘பிரிவே இன்றி' என
ஏகாரத்தை மாற்றிக் கொள்க. ஐந்து தலைப் பாம்பு தன் வாய்கள்
ஐந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் உணவு ஒரே மிடற்றின் வழியே ஒரே
வயிற்றுக்குட் செல்வதுபோல உடன்பிறந்தோர் ஈட்டிய பொருள் ஒருங்கே
பயன்படல் வேண்டும். ஐந்து + தலை - ஐந்தலை. சக + உதரர் - சகோதரர்
(வடமொழி விருத்திசந்தி).
(க-து.) உடன்
பிறந்தோர் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'.
5.
நல்லாசிரியர் இயல்
வேதாந்த சித்தாந்த வழிதெரிந் தாசார
விவரவிஞ் ஞானபூர்ண
வித்யாவி சேடசற் குண சத்ய சம்பன்ன
வீரவை ராக்ய முக்ய
சாதார ணப்பிரிய யோகமார்க் காதிக்ய
சமாதிநிஷ் டானு பவராய்ச்,
சட்சமய நிலைமையும் பரமந்த்ர பரதந்த்ர
தருமமும் பரச மயமும்
நீதியின் உணர்ந்து, தத்துவமார்க்க ராய்ப், பிரம
நிலைகண்டு பாச மிலராய்,
நித்தியா னந்தசை தன்யராய், ஆசையறு
நெறியுளோர் சற்கு ரவராம் |
|
|
|
|