பக்கம் எண் :

134

           88. பல்துறை

தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்
     தங்களுக் கவைத ழுவுறா!
  சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்
     தயவிலோர் ஆயுள் பெருகார்!
மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்
     வீடுநற் செந்நெல் இவைகள்
  வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்
     விலைகொடுத் தேகொள் ளுவார்!
தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்
     தீண்டரிய நீசர் எனினும்
  சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்
     சீலமுடை யோர்என் பரால்!
ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே!
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


      (இ-ள்.)
ஆன் கொடி உயர்த்த உமை நேசனே - ஏற்றுக்கொடியை
உயர்த்திய உமையன்பனே!, ஈசனே - செல்வத்தை யளிப்பவனே!, அண்ணலே
- பெரியோனே!, அருமை ....... தேவனே!, தாம்புரி தவத்தையும்
கொடையையும் புகழுவோர் தங்களுக்கு அவை தழுவுறா - தாங்கள் செய்த
தவத்தினையும் ஈகையையும் புகழ்ந்து கூறிக்கொள்வோருக்கு அவை
கிடையாமற் போய்விடும், சற்றும் அறிவு இல்லாமல் அந்தணரை நிந்தை செய்
தயவு இலோர் ஆயுள் பெருகார் - சிறிதும் அறியாமல் அந்தணரைப் பழிக்கும்
இரக்கமிலோர்க்கு ஆயுள் குறையும், மேம்படு நறுங்கலவை மாலை தயிர் பால்,
புலால் வீடு நல் செந்நெல் இவைகள் - உயர்ந்த மணமிக்க கலவைச் சந்தனம்,
மாலை, தயிர், பால், ஊன், வீடு, நல்ல செந்நெல் ஆகிய இவற்றை,