(இ-ள்.)
ஆதிவடநீழலில் சனகாதியர்க்கு அருள்செய்
அண்ணலே - முற்காலத்தில் கல் ஆலமரத்தின் நிழலில் சனகர்
முதலானோர்க்கு அருள்புரிந்த பெரியோனே!, அருமை......தேவனே!,
பூதம் ஓர் ஐந்து - ஓர் ஐம்பூதங்களும், உடன் புலன் ஐந்தும் -
(அவற்றுடன்) ஐம்புலன்களும், ஞானம் பொருந்தும் இந்திரியம்
ஐந்தும் - ஞான இந்திரியங்கள் ஐந்தும், பொரு இல் கன்ம இந்திரியம்
ஐந்தும் - உவமையில்லாத கன்ம இந்திரியங்கள் ஐந்தும், மனம் ஆதி
ஆம் புகல் அரிய கரணம் நான்கும் - மனம் முதலிய சொல்லற்கரிய
கரணங்கள் நான்கும், இவை ஆன்ம தத்துவம் என ஓதினோர்
சொல்வர் - இவற்றை ஆன்ம தத்துவம் என்று கற்றறிந்தோர் கூறுவர்,
உயர்காலம் நியதி கலையோடு ஒங்கிவரு வித்தை ராகம் புருடன்
மாயை என்று உரைசெய்யும் ஓரேழுமே தீது இல் வித்யா தத்துவம்
என்றிடுவர் - உயர்வாகிய காலம், நியதி, கலைகளோடு கூறப்படும்
ஏழினையும் குற்றமற்ற வித்தியாதத்துவம் எனக் கூறுவர், இவை அலால்
- இவையல்லாமல், திகழ்சுத்த வித்தை, ஈசன், சீர்கொள் சாதாக்கியம்,
சத்தி, சிவம் ஐந்துமே சிவ தத்துவம் என்று அறைகுவார் - விளங்கும்
சுத்தவித்தை, ஈசன், சிறப்புடைய சாதாக்கியம் சத்தி, சிவம் (ஆகிய)
ஐந்தினையும் சிவ தத்துவம் என்று கூறுவர்.
(வி-ரை.) பூதம் ஐந்து : மண்,
நீர், அனல், வளி, வான்.
புலன்
ஐந்து : சுவை
, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம்.
ஞான இந்திரியம் ஐந்து :
மெய்,
வாய், கண், மூக்கு, செவி.
கன்ம இந்திரியம் ஐந்து : வாக்கு,
பாதம்,
பாணி, பாயுரு, உபத்தம்.
கரணம் நான்கு: மனம்,
புத்தி, சித்தம், அகங்காரம்.
வடம் - ஆலமரம். சனகாதியர் - சனகர், சனந்தகர், சனத்குமாரர், சஹ்யஜாதர்.
ஞான இந்திரியம் : அறிவுப்பொறி. கன்மஇந்திரியம்: தொழிற்பொறி
ஆன்மதத்துவம் உயிருடன் சேர்ந்தவை : இருபத்துநான்கு தத்துவங்கள்.
வித்தியா தத்துவம் : கவலையுடன் சேர்ந்தவை ஏழு
தத்துவங்கள்சிவதத்துவம் : இறையுடன் சார்ந்தவை : ஐந்துதத்துவங்கள்,
ஆக முப்பத்தாறு.
|