துன்பத்தைத்
கொடுக்கும், குளிர் முல்லை வீழ்த்திடும் - குளிர்ந்த முல்லைமலர்
(படுக்கையில்) விழச்செய்யும், நீலம் உயிர் போக்கிவிடும் - நீலமலர் உயிரை
ஒழிக்கும், மேவும் இவை செயும் அவத்தை - பொருந்தும் இவை உண்டாக்கும்
நிலைகளாவன : நினைவில் அதுவே நாக்கம் - எண்ணத்தில் அதுவே
கருதுதல், வேறு ஒன்றில் ஆசை அறல் - மற்றொன்றில் ஆசை நீங்கல்,
நெட்டுயிர்ப்பொடு பிதற்றல் - பெருமூச்சுடன் பிதற்றுதல், நெஞ்சம் திடுக்கிடுதல்
- உள்ளம் திடுக்கிடல், அனம் வெறுத்திடல் - உணவில் வெறுப்பு, காய்ச்சல் -
உடல் வெதும்புதல், நேர்தல் - மெலிதல், மௌனம் புரிகுதல் - பேசாதிருத்தல்,
அனைய உயிர் உண்டு இல்லை என்னல் - ஆசையுற்ற உயிர் உண்டோ
இல்லையோ என்னும் நிலையடைதல், ஈரைந்தும் ஆம் - (ஆகிய இவை)
பத்தும் ஆகும்.
(வி-ரை.) வேள்
- விருப்பத்தைச் செய்வோன். ஒண்மை - சிறப்பு.
அவத்தை - நிலை. அனம் - அன்னம் (இடைக்குறை.)
91.
காமன் துணைப்பொருள்கள்
வெஞ்சிலை
செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;
மேல்விடும் கணைகள் அலராம்;
வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;
வேழம்கெ டாதஇருள் ஆம்;
வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய
வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;
மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;
மனதேபெ ரும்போர்க் களம்;
சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;
சார்இரதி யேம னைவிஆம்;
தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்
தவறாதி ருக்கும் இடம்ஆம்;
|
|