பக்கம் எண் :

140

வெம்மை + சிலை - வெஞ்சிலை. பசுமை +கிள்ளை - பைங்கிள்ளை.
செழுமை + கழை - செழுங் கழை. பெருமை + சேனை - பெருஞ்சேனை.
உடைவாள் - அரையிற் கட்டப்படும் வாள்.

        92. பகை கொள்ளத் தகாதவர்

மன்னவர்,
 
அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு
     மாறாத மர்மம் உடையோர்,
  வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்
     மடையர்,மந் திரவா தியர்,
சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்
     சூழ்வயித் தியர்,க விதைகள்
  சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்
     சொப்பனந் தனில் ஆகிலும்
நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்
     நானிலத் தென்பர் கண்டாய்!
  நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும்
     நம்பனே! அன்பர் நிதி யே!
அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
நாரி ஓர் பாகனே - உமையொரு பங்கனே!, வேத ஆகமம்
பரவும் நண்பனே - மறையும் ஆகமமும் போற்றும் சிறப்புடையவனே!,
அன்பர் நிதியே - அன்பரின் சேமப்பொருளே!, அன்னம் ஊர் பிரமனும்
கண்ணனும் காணாத அண்ணலே - அன்னத்தில் ஊர்ந்து வரும் நான்முகனும்
திருமாலும் கண்டுபிடிக்க இயலாத பெரியோனே!, அருமை ........ தேவனே!,
மன்னர் - அரசர், அமைச்சர் - மந்திரிகள், துர்ச்சனர் - தீயோர், கோளர் -
கோள் சொல்லுவோர், தூதரொடு - தூதர்களுடன், மாறாத மர்மம்
உடையோர் - நீங்காத செற்றம் கொண்டவர்கள்,