பக்கம் எண் :

141

வலுவர் - வலிமையுடையோர், கருணீகர் - கணக்கர், மிகு பாகம் செய்து
அன்னம் இடும் மடையர் - சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர்,
மந்திர வாதியர் - மந்திரஞ் செய்வோர் சொன்னம் உடையோர் - செல்வ
மிக்கவர்கள், புலையர் - இழிந்தோர், உபதேசமது செய்வோர் - உபதேசியர்,
சூழ் வயித்தியர் - ஆராய்ச்சியுடைய மருத்துவர், கவிதைகள் சொற்றிடும்
புலவர் - செய்யுள் இயற்றும் புலவர்கள், இவர் பதினைந்து பேரொடும்
சொப்பனந்தனில் ஆகிலும் நன்னெறி அறிந்தபேர் இந்நானிலத்து பகை
செய்திடார் - இவர்கள் பதினைவருடனும் கனவிலும் நல்ல நெறி
அறிந்தவர்கள் இவ்வுலகிற் பகை கொள்ளார், என்பர் - என்று கூறுவர்.


     (வி-ரை.)
கண்டாய் : முன்னிலை அசைச் சொல் : நன்மை + நெறி -
நன்னெறி, மடை - சோறு. மடையர் - சமையல் செய்வோர். உபதேசம்
புரிவோர் - ஆன்மநெறி கற்பிக்கும் ஆசிரியர்.

 93. நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்

சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்
     சொல்லும்நல் நெல்லை எள்ளைத்
  தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்
     தொண்டரைத் தொழுதொ ழும்பை
நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்
     நற்றமிழ்க் கவிவா ணரை
  நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க
     நயமுள்ள நாரியர் தமைப்
புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்
     போர்வீர ரைத்தூ யரைப்
  போதவும் பரிவோ டிதஞ்செய்ய மிகுபயன்
     புகழ்பெறக் கொள்வர் கண்டாய்