பக்கம் எண் :

143

         94. முப்பத்திரண்டு அறங்கள்

பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்
     பிள்ளைகள் அருந்தி டும்பால்,
  பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்
     பெண்போகம், நாவிதன், வணான்,
மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு
     வாயின்உறை, பிணம்அ டக்கல்,
  வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்
     வழங்கல், சுண் ணாம்பு தவுதல்,
சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்
     செய்தல், முன் னூலின் மனம்,
  திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,
     தேவரா லாயம்,அ வுடதம்;
அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்
     அன்னைசெயல்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே.


     (இ-ள்.)
அருமை ....... தேவனே!, பெறும் இல் - மகவு பெறுதற்கு
வீடு விடுதல், பெறுவித்தலொடு - மகவு பெறுதற்கு வேண்டியவற்றை
உதவுதல், காது ஓலை - காதணி அளித்தல், நாள்தொறும் பிள்ளைகள்
அருந்திடும் பால் - அன்றாடம் குழந்தைகள் பருகும் பால் அளித்தல்,
பேச அரிய சத்திரம் - சொலற்கரிய சத்திரம் கட்டல், மடம் - (துறவிகள்
இருக்கும்) மடம் அமைத்தல், ஆவுரிஞ்சு கல் - பசுக்களின் தினவு நீக்கும்
கல்நடுதல், பெண்போகம் - பெண்களுக்கு இன்பம் அளித்தல், நாவிதன் -
அம்பட்டனுக்கு உதவுதல், வணான் - வண்ணானுக்கு உதவுதல், மறைமொழி
கண்ஆடி - மறையில் கூறுமாறு கண்ணாடி யீதல், தண்ணீர் - நீர்
வேட்கையைத் தணித்தல், தலைக்கு எண்ணெய் - தலைக்கு எண்ணெய்
கொடுத்தல், பசுவின்