பக்கம் எண் :

144

வாய் உறை - பசுக்களுக்குத் தீனி, பிணம் அடக்கல் - (ஆதரவு அற்ற)
பிணத்தை அடக்கம் செய்தல், வாவி - குளம் வெட்டுதல், இறும் உயிர்
மீட்டம் - இறக்கும் உயிரைக் காத்தல், தின்பொருள் - தின்பண்டம்
அளித்தல், அடைக்காய் வழங்கல் - வெற்றிலைபாக்குக் கொடுத்தல்,
சுண்ணாம்பு உதவுதல், சிறை உறுபவர்க்கு அமுது - சிறையில்
அகப்பட்டவர்க்கு உணவு கொடுத்தல், வேறு இலம் காத்தல் - பிறர்
துயரைப் போக்குதல், பொழில் செய்தல் - சோலை வைத்தல், முன் நூலின்
மணம் - பழைய நூல் முறைப்படித் திருமணம் செய்வித்தல், திகழ் விலங்கு
ஊண் - விளங்கும் விலங்குகளுக்கு உணவளித்தல், பிச்சை - இரப்போர்க்கு
ஈதல், அறு சமயருக்கு உண்டி - அறுவகை அகச் சமயத்தாருக்கும் உணவு
அளித்தல், தேவராலயம் - திருக்கோயில் கட்டுதல், அவுடதம் - மருந்து
கொடுத்தல், அறைதல் கற்போருக்கு அன்னம் - பாடம் படிப்போர்க்கு
உணவு அளித்தல், நாலெட்டு அறங்களும் - (ஆகிய) முப்பத்திரண்டு
அறங்களும், முன் அன்னை செயல் - முற்காலத்தில் உமையம்மையார்
காஞ்சியிற் செய்தவை ஆகும்.


     (வி-ரை.)
இலம் - வறுமை (துயரைக் குறிக்கிறது.)

           95. இல்லறம்

தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்
     சன்மார்க்கம் உளமனை வியைத்
  தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்
     தனைநம்பி வருவோர் களைச்
சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்
     தென்புலத் தோர் வறிஞரைத்
  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
     தேனுவைப் பூசுரர் தமைச்