|
புராணம் நான்கு
ஆம் - பெருமையுடைய புராணங்கள் நான்கும் ஆம்,
கலைவளர் சொல் பதுமமொடு பிரமகை வர்த்தமே கமலாலயன் காதை ஆம்
- கலைவல்லார்கூறும் பதுமபுராணமும் பிரமகைவர்த்த புராணமும் தாமரை
மலரவன் காதைகள் ஆகும், கதிரவன் காதையே சூரிய புராணம் ஆம் -,
கனல் காதை ஆக்கினேயம் - அக்கினியின் கதை ஆக்கினேய புராணம்.
(வி-ரை.) சைவபுராணம்
பத்து; வைணவபுராணம் நான்கு; பிரமபுராணம்
இரண்டு, கதிரவன் புராணம் ஒன்று; ஆக்கினேய புராணம் ஒன்று; ஆகப்
பதினெண் புராணங்கள்.
|
97.
புகழ்ச்சி
பருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,
பாரில்மறை யாத நிதியம்,
பரிதிகண் டலராத நிலவுகண் டுலராத
பண்புடைய பங்கே ருகம்
கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்
கானில் உறை யாத சீயம்;
கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்
காசினியில் அருமை யாகும்!
தெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,
சீரிதயம், ஈகை, வதனம்,
திடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்! இச்
செகமெலாம் கொண்டா டவே
அருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை
ஆகும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) இச்
செகம் எலாம் கொண்டாட - இவ்வுலகெங்கும் புகழ,
அருள் கற்ப தரு என்ன - அருள் மிகுந்த கற்பகத் தருவைப்போல,
ஓங்கிடும் தானதுரை |