பக்கம் எண் :

148

ஆகும் - உயர்ந்த கொடைத்தலைவன் ஆகிய, எமது அருமை தேவனே!,
பருகாத அமுது - உண்ணாத அமுதம், ஒருவர் பண்ணாத பூடணம் -
ஒருவராற் செய்யப்படாத அணிகலம்; பாரில் மறையாத நிதியம் - உலகில்
அழியாத செல்வம், பரிதிகண்டு அலராத நிலவு கண்டு உலராத பண்புடைய
பங்கேருகம் - ஞாயிற்றைக் கண்டு மலராததும் திங்களைக் கண்டு
வாடாததும் ஆகிய தன்மையுடைய தாமரை, கருகாத புயல் - கருநிறம்
பெறாது பெய்யும் முகில், கலைகள் அருகாத திங்கள் - கலைகள் குறையாத
திங்கள், வெங்கானில் உறையாத சீயம் - கொடிய காட்டில் வாழாத சிங்கம்,
கருத அரிய இக்குணம் அனைத்தும் உண்டானபேர் காசினியில்
அருமையாகும் - நினைவிற்கு எட்டாத இப்பண்புகள் யாவும் உடையவர்
இவ்வுலகிற் கிடைப்பது அருமையாகும், (எனினும், இவைகட்கு ஒப்பாக)
தெரிய உரை செய்யின் - விளங்க எடுத்துக் கூறினால் (முறையே), மொழி,
கீர்த்தி, வருகல்வியொடு, சீர்இதயம், ஈகை, வதனம், திடமான வீரம் இவை
என்று அறிகுவார்கள் - உரையும், புகழும், வளரும் கல்வியும், சிறப்புள்ள
உள்ளமும், கொடையும், முகமும், அசையாத வீரமும் ஆகிய இவை என்று
தெரிந்துகொள்வார்கள்.


     (வி-ரை.)
அமுது மொழி, அணிகலம் கீர்த்தி, நிதியம் கல்வி,
பங்கேருகம் இதயம், புயல் ஈகை திங்கள் வதனம், சீயம் வீரம் என ஒப்பிடுக.
இங்கு மதவேளின் ஈகைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

       98. திருமால் அவதாரம்

சோமுகா சுரனை முன் வதைத்தமரர் துயர்கெடச்
     சுருதிதந் ததுமச் சம்ஆம்;
  சுரர்தமக் கமுதுஈந்த தாமையாம்; பாய்போற்
     சுருட்டிமா நிலம்எ டுத்தே
போமிரணி யாக்கதனை உயிருண்ட தேனமாம்;
     பொல்லாத கனகன் உயிரைப்
  போக்கியது நரசிங்கம்; உலகளந் தோங்கியது
     புனிதவா மனமூர்த் திஆம்;