செய்து
- கொடுத்து, இரவு பகல் போற்றி - இரவும் பகலும் விடாமல்
வணங்கி, மலரடியில் மெய்யாகவே வீழ்ந்து பரவி - (ஆசிரியன்)
மலர்போன்ற திருவடிகளில் உண்மையாகவே வீழ்ந்து புகழ்ந்து கூறி,
உபதேசமது பெற விரும்புவோர் சற் சீடர்ஆம் - அறிவுபெற விழைவோர்
நல்ல மாணாக்கராவர், அவர்க்கு வினைவேர் அறும்படி அருள்
செய்திடுவதே மிக்க தேசிகரது கடன் - அவர்களுக்கு வினையின் வேர்
கெடும்படி அருள் செய்வது சிறந்த ஆசிரியரது கடமையாகும்.
(வி-ரை.) கொடுமை
செய்தாலுமோ, இகழ்ந்தாலுமோ
என்பனவற்றிலுள்ள ஓகாரங்கள் அசையாக வந்தன. அன்னையின் சிறப்பு
நோக்கி ‘மாதா பிதா' என முற்கூறினார். ‘பொருள் உடல் ஆவி' யென
ஒன்றினும் ஒன்று மேன்மேற் சிறப்பு நோக்கி முறைப்படுத்தப்பட்டன.
வினை : நல்வினை தீவினை யிரண்டும் என்பர். வினையின் வேர்
ஆசையாகும்.
(க-து.) இங்குக்
கூறப்பட்டவை நன்மாணாக்கரின் இயல்.
7. பொருள்செயல்
வகை
புண்ணிய வசத்தினாற் செல்வமது வரவேண்டும்;
பொருளைரட் சிக்க வேண்டும்
புத்தியுடன் அதுவொன்று நூறாக வேசெய்து
போதவும் வளர்க்க வேண்டும்;
உண்ணவேண் டும்; பின்பு நல்லவத் ராபரணம்
உடலில்த ரிக்க வேண்டும்;
உற்றபெரி யோர்கவிஞர் தமர்ஆ துலர்க்குதவி
ஓங்குபுகழ் தேட வேண்டும்;
மண்ணில்வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர்மோட்ச
வழிதேட வேண்டும்; அன்றி,
வறிதிற் புதைத்துவைத் தீயாத பேர்களே
மார்க்கம்அறி யாக்குரு டராம் |
|
|
|
|