அண்ணலே!
கங்கா குலத்தலைவன் மோழைதரும்
அழகன்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.) அண்ணலே
- தலைவனே!, கங்காகுலத் தலைவன்
மோழைதரும்
அழகன் - கங்கை மரபின் முதல்வனான மோழை யீன்ற
அழகனான, உமது ......... தேவனே!, செல்வமது புண்ணிய வசத்தினால்
வரவேண்டும் - செல்வமானது நல்ல நெறியிலே கிடைத்தல் வேண்டும்,
பொருளை ரட்சிக்க வேண்டும் - (அவ்வாறு கிடைத்த) செல்வத்தைக்
காப்பாற்றல் வேண்டும், புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து
போதவும் வளர்க்க வேண்டும் - அறிவின் திறத்தால், அப்பொருளை
ஒன்று நூறாகுமாறு புரிந்து நன்றாகப் பெருக்குதல் வேண்டும்; உண்ண
வேண்டும் - சாப்பிடவேண்டும், பின்பு நல்ல வத்திரம் ஆபரணம் உடலில்
தரிக்க வேண்டும் - பிறகு, அழகிய ஆடைகளையும் அணிகளையும்
மெய்யிலே அணிதல் வேண்டும், உற்ற பெரியோர் கவிஞர் தமர்
ஆதுலர்க்கு உதவி ஓங்குபுகழ் தேடவேண்டும் - தம்மையடைந்த
பெரியோர்க்கும் கவிஞருக்கும் உறவினர்க்கும் வறியவர்க்குங் கொடுத்து
மிக்க புகழை யீட்டல் வேண்டும், மண்ணில் வெகு தருமங்கள்
செயவேண்டும் - உலகிலே வேறுபல அறங்களையும் இயற்றுதல் வேண்டும்,
உயர் மோட்ச வழிதேட வேண்டும் - மேலான வீட்டுக்கு நெறியாராய்தல்
வேண்டும், அன்றி - (இவ்வாறு) அல்லாமல், வறிதில் புதைத்து வைத்து
ஈயாத பேர்களே மார்க்கம் அறியாக் குருடராம் - வீணிலே (மண்ணில்)
புதைத்து வைத்துவிட்டுப் (பிறர்க்கு) அளிக்காதவர்களே நெறியறியாத
குருடர்கள் ஆவர்.
(வி-ரை.) கங்கை
- நீர். வேளாளர் உழவுக்கு நீரையே விரும்பி
நிற்பார்கள் என்பதனாற் கங்கா குலத்தவர் எனப்பட்டனர். இச் செய்யுளால்
மதவேளின் தந்தை மோழை யென்றறியப்படும். புண்ணியம் - நன்மை.
வசம் - ஆதரவு. வத்திர ஆபரணம் : வத்திராபரணம் (தீர்க்கசந்தி).