(க-து.)
நன்னெறியிற்
பொருளையீட்டித் தானும் உண்டு உடுத்துப்
பிறர்க்கும் அளித்தல் வேண்டும்.
8.
ஒண்ணாது
வஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார்
வாசலிற் செல்லொ ணாது;
வாதெவ ரிடத்திலும் புரியொணா தறிவிலா
மடையர்முன் நிற் கொணாது;
கொஞ்சமே னும்தீது செய்யொணா தொருவர்மேல்
குற்றஞ்சொ லொண்ணா தயல்
கோதையர்க ளோடுபரி காசஞ்செ யொண்ணாது;
கோளுரைகள் பேசொணாது;
நஞ்சுதரும் அரவொடும் பழகொணா திருள்வழி
நடந்துதனி யேகொணாது
நதிபெருக் காகின் அதில் நீஞ்சல்செய் யொண்ணாது;
நல்வழி மறக்கொணாது;
அஞ்சாமல் அரசர்முன் பேசொணா திவையெலாம்
அறியும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.)
இவையெலாம்
அறியும் - இங்குக் கூறப் பட்டவற்றை
யெல்லாம் அறிந்த, எமது ............ தேவனே! வஞ்சகர்தமைக் கூடி மருவ
ஒணாது - வஞ்சகரைக் கூடிப் பழகல் தகாது, அன்பு இலார் வாசலில்
செல்லஒண்ணாது - அன்பு இல்லாதவரின் வீட்டுவாயிலை அடைதல்
கூடாது, வாது எவரிடத்திலும் புரியஒணாது - எவரிடமும் வாதாடல்
கூடாது அறிவு இலா மடையர்முன் நிற்க ஒணாது - அறிவு இல்லாத
பேதைகளின் எதிரிலும் செல்லக் கூடாது, கொஞ்சமேனும் தீது செய்ய
ஒணாது - சிறிதாகினும் தீய செயலைச் செய்தல் ஒவ்வாது, ஒருவர் மேல்
குற்றம் சொலஒண்ணாது - ஒருவர்மேல் குறைகூறல் கூடாது, அயல்
|