ஆழ்கடல்
உதித்துவரு விடம்உண்ட கண்டனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.) சௌரி,
மலரோன், அமரர், முனிவர், முச்சுடர் எலாம்
- திருமாலும் பிரமனும் வானவரும் முனிவரும் (மதி யிரவி அங்கி யெனும்)
முச்சுடரும் ஆகிய எல்லோரும் சரணம் எமை ரட்சி என - அடைக்கலம்
எங்களை ஆதரி என்று வேண்ட, ஆழ்கடல் உதித்துவரும் விடம் உண்ட
கண்டனே - ஆழமான கடலில் தோன்றி வந்த நஞ்சம் உண்ட (நீல)
கண்டனே!, அண்ணல் - தலைவனாகிய எமது ......... தேவனே!, வாழ்மனை
தனக்கு அழகு குலமங்கை - வாழும் இல்லத்திற்கு அழகு நற்குடிப்பிறந்த
மங்கையாவாள், குலமங்கை வாழ்வினுக்கு அழகு சிறுவர் - குலமங்கையின்
வாழ்விற்கு அழகு செய்வோர் நன்மக்கள், வளர் சிறுவருக்கு அழகு கல்வி -
வளரும் சிறுவர்களுக்கு அழகு செய்வது கல்வி, கல்விக்கு அழகு மாநிலம்
துதி செய் குணம்ஆம் - கல்விக்கு அழகாவது பெரிய உலகம் புகழும்
நற்பண்பாகும், சூழ்குணமதற்கு அழகு பேரறிவு - பொருந்திய அந்த
நற்பண்புக்கு அழகுசெய்வது பெருமை மிக்க அறிவு, பேரறிவு தோன்றிடில்
அதற்கு அழகுதான் - பேரறிவு உண்டானால் அதற்கு அழகு செய்பவை,
தூய தவம் - நல்ல தவமும், மேன்மை - பெருந்தன்மையும், உபகாரம் -
(பிறருக்கு) உதவியும், விரதம் - நோன்பும், பொறுமை - பொறையும், சொல்
அரிய பெரியோர்களைத் தாழ்தல் - புகழ்தற்கரிய பெரியோர்களை
வணங்குதலும், பணிவிடை புரிதல் - (அவர்கட்குத்) தொண்டுசெய்தலும்,
சிவநேசம் - சைவப்பற்றும், கருணை - அருளும் (என) சாற்றும் இவை
அழகு என்பர் - கூறப்பட்ட இவை அழகாகும் என்பார்கள் (அறிஞர்கள்.)
காண் : முன்னிலையசைச் சொல்.
(க-து.) இங்குக்
கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று அழகு செய்வன.
|
|
|
|