புலவர்கள்
இல்லாத அவையும், சுதி லயை இலாத பண் - இசையுந் தாள
அளவும் இல்லாத சங்கீதமும், காவலர் இலாத தேசம் - அரசன் இல்லாத
நாடும், ஈவது இல்லாத தனம் - கொடையில்லாத பொருளும், நியமம்
இல்லாத செபம் - ஒழுங்கு இல்லாத வழிபாடும், இசை லவணம் இல்லாத
வூண் - ஏற்ற அளவு உப்பில்லாத உண்டியும், இச்சை யில்லாத பெண்
போகம் - விருப்பமற்ற மங்கையின் இன்பமும், இவை தம்மின் - ஆகிய
இவற்றால், ஏது பலன் உண்டு - என்ன நன்மை யுண்டு? கண்டாய் :
முன்னிலை அசைச் சொல்.
(க-து.) கோயில்
இல்லாத வூர் முதலானவை பயனற்றவை.
11.
தகாத சேர்க்கை
பூததயை இல்லாத லோபிய ரிடத்திலே
பொருளைஅரு ளிச்செய் தனை!
புண்ணியம் செய்கின்ற சற்சன ரிடத்திலே
பொல்லாத மிடிவைத் தனை!
நீதியகல் மூடர்க் கருந்ததி யெனத்தக்க
நெறிமாத ரைத்தந் தன்னை!
நிதானம்உள உத்தமர்க் கிங்கிதம் இலாதகொடு
நீலியைச் சோவித் தனை!
சாதியில் உயர்ந்தபேர் ஈனர்பின் னேசென்று
தாழ்ந்துபர வச்செய் தனை!
தமிழருமை யறியாத புல்லர்மேற் கவிவாணர்
தாம்பாட வேசெய் தனை!
ஆதரவிலாமல்இப் படிசெய்ததென் சொலாய்?
அமல! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
|
|
|
|