பக்கம் எண் :

22

சம்மதித்து அவளோடு இணங்கி வாழ்பவன் ஒரு பதர் - தன் மனையாள்
அயலானிடத்திற்போக மனம் ஒப்பி, அவளுடன் கூடிவாழ்வான் ஒரு பதர்,
தன்னை வேறொருவர் மெச்சாது தானே மெச்சி வீண் பேசுவான் ஒரு பதர்
- தன்னை மற்றவர் புகழாமல், தானே புகழ்ந்துகொண்டு
வெற்றுரையாடுவான் ஒரு பதர், வேசையர்கள் ஆசை கொண்டு
உள்ளளவும் மனையாளை விட்டுவிடுவான் ஒரு பதர் - பரத்தையரிடங்
காமுற்றுக்காலமெல்லாம் இல்லாளைப் பிரிந்திருப்பவன் ஒரு பதர்.


     (க-து.)
இங்குக் கூறப்பட்டவர்கள் மக்களுக்கு இழிவையுண்டாக்கத்
தக்கவர்கள்.


          13. செய்ய வேண்டும்

வாலிபந் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற
     வழியிலே நிற்க வேண்டும்;
  வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி
     வளரறஞ் செய்ய வேண்டும்;
சீலம்உடை யோர்களைச் சேரவேண் டும்;பிரிதல்
     செய்யா திருக்க வேண்டும்
  செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண் டும்;கொண்டு
     தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பலதருமம் நாட்டவேண் டும்;நாட்டி
     நன்றாய் நடத்த வேண்டும்;
  நம்பன் இணை யடிபூசை பண்ணவேண் டும்;பண்ணி
     னாலும்மிகு பத்தி வேண்டும்
ஆலமமர் கண்டனே! பூதியணி முண்டனே!
     அனக! எமதருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!