(இ-ள்.)
ஆலம் அமர்கண்டனே - நஞ்சு பொருந்திய
கழுத்தையுடையவனே! பூதி அணி முண்டனே - திருநீறு பூசிய நெற்றியை
யுடையவனே!, அனக - குற்றம் இல்லாதவனே!, எமது........ தேவனே!,
வாலிபந்தனில் வித்தை கற்கவேண்டும் - இளமையிலேயே கலைகளைக்
கற்றல் வேண்டும், கற்ற வழியிலே நிற்கவேண்டும் - கற்றவாறே
நன்னெறியிலே நடத்தல் வேண்டும், வளைகடல் திரிந்து பொருள்
தேடவேண்டும் - (உலகை) வளைந்திருக்குங் கடலிலே (கலம் ஊர்ந்து)
அலைந்து பொருளைச் சேர்த்தல் வேண்டும். தேடி வளர் அறஞ்
செய்யவேண்டும் - சேர்த்துப் பெருகும் அறங்களை இயற்றல் வேண்டும்,
சீலம் உடையோர்களைச் சேரவேண்டும் - ஒழுக்கம் உடையவர்களிடம்
நட்புக் கொள்ளவேண்டும், பிரிதல் செய்யாது இருக்கவேண்டும் -
(அவர்களை) நீங்காது இருத்தல் வேண்டும். செந்தமிழ்ப் பாடல் பல
கொள்ளவேண்டும் - பல செந்தமிழ்ப் பாக்களைப் (புகழ் மாலையாக)
ஏற்றல் வேண்டும், கொண்டு தியாகம் கொடுக்கவேண்டும். ஏற்றுப்
(புலவர்களுக்கு) நன்கொடை அளித்தல் வேண்டும். ஞாலம்மிசை பல
தருமம் நாட்டவேண்டும் - உலகிலே பல அறநிலையங்களை நிறுவுதல்
வேண்டும். நாட்டி நன்றாய் நடத்தவேண்டும் - நிறுவியதோடு நில்லாமல்,
அவற்றை ஒழுங்காக நடத்தல் வேண்டும். நம்பன் இணையடி பூசை
பண்ணவேண்டும் - சிவபெருமானாகிய (உன்) இரு திருவடிகளினும்
வழிபாடு செய்தல் வேண்டும், பண்ணினாலும் மிகுபத்தி வேண்டும் -
வழிபாடு செய்தாலும் பேரன்பு வேண்டும்.
(க-து.) இங்கே
கூறியவாறு கல்வி கற்றல் முதலியவை வேண்டும்.
14.
மேன்மேல் உயர்ச்சி
தன்மட்டில் இரவாது சீவனம் செய்பவன்
சாமர்த்தியம் உளபுருடன் ஆம்
சந்ததம் பதின்மரைக் காப்பாற்று வோன்மிக்க
தரணிபுகழ் தருதேவன் ஆம். |
|