பக்கம் எண் :

24

பொன்மட்டி லாமலீந் தொருநூறு பேரைப்
     புரப்பவன் பொருவி லிந்த்ரன்,
  புவிமீதில் ஆயிரம் பேர்தமைக் காப்பாற்று
     புண்யவா னேபிரமன் ஆம்
நன்மைதரு பதினா யிரம்பேர் தமைக்காத்து
     ரட்சிப்ப வன்செங் கண்மால்,
  நாளுமிவன் மேலதிகம் ஆகுவெகு பேர்க்குதவு
     நரனே மகாதே வன் ஆம்,
அன்மட்டு வார்குழலி பாகனே! ஏகனே!
     அண்ணல்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.)
அல் மட்டுவார் குழலி பாகனே - இருள் போலக்
கருநிறமான, மணமிக்க, நீண்ட கூந்தலையுடைய உமையம்மையாரை
இடப்பாகத்தில் உடையவனே!, ஏகனே - தனி முதல்வனே!, அண்ணல் -
தலைமையிற் சிறந்தவனே, எமது..........தேவனே!, இரவாது தன்மட்டில்
சீவனம் செய்பவன் சாமர்த்தியம் உள புருடன் ஆம் - (பிறரை) நாடாமல்
தன்வரையில் வாழ்க்கை நடத்துவோன் திறமுடைய ஆடவனாவான்,
சந்ததம் பதின்மரைக் காப்பாற்றுவோன் மிக்க தரணி புகழ்தரு தேவன்
ஆம் - எப்போதும் பதின்மரை ஆதரிப்போன் இவ்வுலகு புகழும் சிறந்த
அமரன் ஆவான், மட்டிலாமல் பொன் ஈந்து ஒரு நூறுபேரைப் புரப்பவன்
பொருஇல் இந்திரன் - அளவின்றிப் பொருள் கொடுத்து நூறுபேரைக்
காப்பாற்றுவோன் ஒப்பற்ற இந்திரன் ஆவான், புவிமீதில் ஆயிரம்பேர்
தமைக் காப்பாற்று புண்ணியவானே பிரமன் ஆம் - உலகில் ஆயிரவரை
ஆதரிக்கும் அறத்தலைவனே நான்முகன் ஆவான், நன்மைதரு
பதினாயிரம் பேர்தமைக் காத்து ரட்சிப்பவன் செங்கண்மால் - நன்னெறி
செல்லும் பதினாயிரம்பேரைக் காப்பாறியருள்வோன் செந்தாமரைக்