பக்கம் எண் :

25

கண்ணனான திருமால் ஆவான், நாளும் இவன்மேல் அதிகமாக
வெகுபேர்க்கு உதவும் நரனே மகாதேவன் ஆம் - எந்நாளும்
அவனைவிட மிகுதியாக அளவற்றவர்க்குக் கொடுக்கும் மனிதனே
மகாதேவன் ஆவான்.


     (வி-ரை.)
சீவன் (வட) - உயிர்; சீவனம் - வாழ்க்கை. சந்ததம் -
எப்போதும். புரப்பவன் - காப்பவன். தரணி - பூமி இந்திரன்:
மூவுலகுக்குந் தலைவன்.


     (க-து.)
இங்குக் கூறியவாறு ஈவோர்க்கு உயர்ச்சி கொள்க.

          15. செயற்கருஞ் செயல்

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!
     நெருப்பைநீர் போற்செய் யலாம்!
  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!
     நீள்அர வினைப்பூ ணலாம்!
பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்
     பட்சமுட னேஉண்ண லாம்!
  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்
     பாவைபே சப்பண் ணலாம்!
ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்
     எடுக்கலாம்! புத்தி சற்றும்
  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே
     எவருக்கும் முடியா துகாண்!
ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) மேவுஆர் கொன்றைபுனை வேணியா - விரும்பிய
ஆத்தியையும் கொன்றையையும் புனைந்த சடை