முடியுடையவனே!,
சுரர்பரவும் அமலனே - வானவர் வாழ்த்தும் தூயவனே!,
அருமை.........தேவனே!, நீர் மேல் நடக்கலாம் - தண்ணீரின்மேல் நடந்து
செல்லலாம், எட்டியும் தின்னலாம் - (கசப்பையுடைய) எட்டிக்காயையும்
தின்னலாம், நெருப்பை நீர்போல் செய்யலாம் - (வெப்பமுடைய) தீயை
(குளிர்ந்த) நீரைப்போல் ஆக்கலாம், நெடிய பெருவேங்கையைக் கட்டியே
தழுவலாம் - நீண்ட பெரிய வேங்கையைக் கட்டித் தழுவலாம்
நீள்அரவினைப் பூணலாம் - (நஞ்சுடைய) நீண்ட பாம்பை (அது கடிக்காமல்)
மேலே அணிந்துகொள்ளலாம், பார்மீது மணலைச் சோறு எனச் சமைக்கலாம்
- உலகத்திலே மணலைச் சோறாகச் சமைக்கலாம் பட்சமுடனே
உண்ணலாம் - அன்புடன் (அந்த மணற்சோற்றை) உண்ணலாம், பாணமொடு
குண்டு விலகச் செய்யலாம் - அம்பையும் துப்பாக்கி, பீரங்கி ஆகியவற்றின்
குண்டுகளையும் (நம்மீது படாமல்) விலகும்வண்ணம் புரியலாம், மரப்பாவை
பேசப்பண்ணலாம் - மரப் பதுமையைப் பேசும்படி செய்யலாம், ஏர் மேவு
காடியும் கடையுற்று வெண்ணெயும் எடுக்கலாம் - அழகிய காடியையும்
கடைந்து வெண்ணெயையும் எடுக்கலாம், புத்தி சற்றும் இல்லாத மூடர்தம்
மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது - சிறிதும்
அறிவற்றபேதையரின் உள்ளத்தைச் சீர்திருத்த யாவருக்கும் இயலாது,
காண் : முன்னிலை அசைச்சொல்.
(வி-ரை.)
நீர்மேல்
நடத்தல், நெருப்பை நீர்போற் குளிர வைத்தல்
சித்திகள். கொடிய விலங்கும் நஞ்சுடைய பாம்பும் மனவசியத்தால்
வசமாகும். பிறவும் உலகிலே நடைபெறும் வித்தைகள். ‘ஆத்திசூடி'
‘கொன்றை வேந்தன்' எனச் சிவபெருமானுக்குத் திருநாமங்கள் உள்ளன.
(க-து.)
செயற்கருஞ்
செயல் செய்வோரும் மூடரைத் திருத்த
முடியாமல் திகைப்பர்.
|