16.
நல்லோர் - 1
செய்ந்நன்றி
மறவாத பேர்களும், ஒருவர்செய்
தீமையை மறந்த பேரும்,
திரவியம் தரவரினும் ஒருவர்மனை யாட்டிமேற்
சித்தம்வை யாத பேரும்,
கைகண் டெடுத்தபொருள் கொண்டுபோய்ப் பொருளாளர்
கையிற்கொ டுத்த பேரும்,
காசினியில் ஒருவர்செய் தருமம்கெ டாதபடி
காத்தருள்செய் கின்ற பேரும்,
பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கழிவு
புகலாத நிலைகொள் பேரும்.
புவிமீது தலைபோகும் என்னினும் கனவிலும்
பொய்ம்மையுரை யாத பேரும்,
ஐயஇங் கிவரெலாம் சற்புருட ரென்றுலகர்
அகமகிழ்வர்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
அருமை..........தேவனே!,
செய்ந்நன்றி மறவாத பேர்களும் -
(ஒருவர்) செய்த உதவியை மறவாதவரும், ஒருவர் செய் தீமையை
மறந்தபேரும் - ஒருவர் செய்த கெடுதியை மறந்தவர்களும், திரவியம்
தரவரினும் ஒருவர் மனையாட்டிமேல் சித்தம் வையாத பேரும் -
பொருளைக் கொடுக்கவந்தாலும் பிறர் மனைவியின்பால் மனத்தைச்
செலுத்தாதவர்களும், கை கண்டு எடுத்த பொருள் கொண்டுபோய்ப்
பொருளாளர் கையில் கொடுத்தபேரும் - கையினாலே கண்டெடுத்த
பொருளைப் பொருளுக்கு உரியவரிடம் கொண்டுபோய்க்
கொடுத்தவர்களும், காசினியில் ஒருவர் செய் தருமம் கெடாதபடி
காத்தருள் செய்கின்ற பேரும் - உலகில் ஒருவர் செய்த அறம்
கெடுதலுறாமற் காப்பாற்றுகின்றவரும், பொய் ஒன்று நிதி கோடிவரினும்
|