முள்ளவர்க்குப்
பகைவர் உண்டாகமாட்டார், எங்கும் ஒரு சார்பு இலார்க்கு
இடமது இல்லை - ஓரிடத்தும் ஆதரவு அற்றவர்க்கு இடம் கிடையாது,
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான புகழென்பது என்றும் இல்லை -
உலகத்தில் வறியோர்க்குக் கொடாதவர்களுக்கு நிறைந்த புகழ் எப்போதும்
ஏற்படாது, புலையர்க்கு நிசம் இல்லை - இழிந்தவர்க்கு உண்மையிராது,
கைப்பொருள் இலாத ஓர் புருடருக்கு ஒன்றும் இல்லை - கைப்பொருள்
இல்லாத ஒருவனுக்கு எந்த நலனும் இல்லை.
(க-து.) காமி
முதலானோர்க்கு ஒவ்வொன்றில்லையாயினும்
வறியவர்க்கு எந்த நன்மையும் இல்லை.
19. நிலையாமை
காயம்ஒரு
புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
கானல்காட் டும்ப்ர வாகம்!
மேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம்
வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,
வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,
வீண்பொழுது போக்காமலே
நேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில்
நினைவுவைத் திருபோ தினும்
நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண் டர்ச்சிக்க
நிமலனே! அருள்புரி குவாய்
ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
|
|
|
|