அதிரூப
மலைமங்கை நேசனே! மோழைதரும்
அழகன்எம தருமைமதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.) அதிரூப
மலைமங்கை நேசனே - பேரழகுடைய
மலைமகளின் கணவனே! மோழை தரும்அழகன் - மோழையென்பான்
பெற்ற அழகனான, எமது............தேவனே!, அன்னம் மிதம் இன்றிப்
புசிப்போரிடத்திலும் - சோற்றை அளவின்றி உண்பவரிடத்திலும், மிகு
பாடையோரிடத்தும் - மிகைபடப் பேசுகின்றவரிடத்திலும், மெய் ஒன்று
இலாமலே பொய் பேசியே திரியும் மிக்க பாதகரிடத்தும் - ஒரு மெய்யும்
கலவாமல், எப்போதும் பொய்யையே கூறியலையும் மிகவும்
கொடியவரிடத்திலும், கதியொன்றும் இலர்போல மலினம் கொளும் பழைய
கந்தை அணிவோரிடத்தும் - சிறிதும் வழியற்றவரைப்போலக் கிழிந்த
பழைய கந்தையை உடுப்பவரிடத்திலும், கடி நாய் எனச் சீறி எவரையும்
சேர்க்காத கன்னிவாழ் மனையிடத்தும் - கடிக்கின்ற (வெறி) நாய்போலச்
சினந்து பேசி ஒருவரையும் அணுகவிடாத பெண்ணொருத்தி வாழும்
இல்லத்திலும், ததிசேர் கடத்திலும் - தயிர்ப்பானையிலும், கர்த்தபத்
திடையிலும் - கழுதைகளின் குழுவிலும், சார்ந்த ஆட்டின் திரளிலும்
- கூடிய ஆட்டுமந்தையிலும், சாம்பிணம் முகத்திலும் - இறந்த பிணத்தின்
முகத்திலும், இவையெலாம் கவலை புரி தவ்வை வாழ் இடம் என்பர் -
இவை யாவும் கவலையை யுண்டாக்கும் மூத்தவள் வாழும் இடம் என்று
அறிஞர் கூறுவர்.
(வி-ரை.) காண்
: முன்னிலை அசைச்சொல். பாஷை என்னும்
வடமொழி பாடையெனத் தமிழ் ஒலி பெற்றது. இவ்வாறு வருவது தற்பவம்.
பாஷை - மொழி. இங்குக் கூறியவை நற்பண்பும் அழகும் அற்ற இடங்கள்.
தவ்வை - மூத்தவள்; இலக்குமிக்கு மூத்தவள்.
(க-து.) இங்குக்
கூறியவை மூதேவி வாழும் இடங்கள்.
|
|
|
|