பக்கம் எண் :

39

       24. ஒன்றுக்கொன்று ஆதரவு

வானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்
     வாழ்வுதரும் உதவி புவனம்
  வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவி
     வாழ்பெற் றிடுமன் னராம்!
தேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவி
     சேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;
  சேர்குடி படைக்குதவி விளைபயிர்! பயிர்க்குதவி
     சீர்பெற வழக்கு மழையாம்!
மேனிமிர் மழைக்குதவி மடமாதர் கற்பொன்று;
     வேந்தர்தம் நீதி யொன்று
  வேதியர் ஒழுக்கம்ஒன் றிம்மூன்று மேயென்று
     மிக்கபெரி யோர்உரை செய்வார்
ஆனமர் நெடுங்கொடி உயர்த்தனம் இறைவனே!
     அதிபனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
ஆன் அமா நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே - ஏறு
எழுதிய நீண்ட கொடியை உடைய எம் தலைவனே!, அதிபனே - அரசனே!,
அருமை ............ தேவனே!, வானவர் பிதிர்க்கள் முச்சுடர் மூவர்
கோள்கட்கும் வாழ்வு உதவி தரும் புவனம் - அமரரும் தென்புலத்தாரும்
ஞாயிறு திங்கள் தீ என்னும் முச்சுடரும் பிரமன் திருமால் உருத்திரன்
என்னும் முத்தலைவரும் ஒன்பது கோள்களும் வாழ்வதற்கு உதவிசெய்வது
இவ்வுலகம், வளம்மிக்க புவனம் தனக்கு மேன்மேல் உதவி வாழ்வு
பெற்றிடும் மன்னர் ஆம் - செழிப்பு மிகுந்த உலகத்திற்கு மேலும் மேலும்
துணையாவார் வாழ்விற் செழித்த அரசர்கள் ஆவர், தேன் அமர் நறு
தொடையல் புனை மன்னவர்க்கு உதவிசேர்ந்த குடிபடை வர்க்கம் ஆம் -