தேன்
பொருந்திய மணமலர்த்தார் அணிந்த அரசர்கட்குத் துணை
அரசரைச் சார்ந்த குடிகளும் படையும் ஆகிய குழுவாகும், சேர் குடி
படைக்கு உதவி விளை பயிர் - கூடிய குடிகளுக்கும், படைகளுக்கும்
துணையாவது விளைந்த பயிராகும், பயிர்க்கு உதவி சீர்பெற வழங்கும்
மழை ஆம் - பயிருக்குத் துணையாவது சிறப்புறப்பெய்யும் மழையாகும்,
மேல் நிமிர் மழைக்கு உதவி - வானத்தில் ஓங்கிப் பரவிப் பெய்யும்
மழைக்குத் துணையாவன, மடமாதர் கற்பு ஒன்று - இளமங்கையின் கற்பு
ஒன்றும், வேந்தர் தம் நீதி ஒன்று - அரசர்களின் முறைமை ஒன்றும்,
வேதியர் ஒழுக்கம் ஒன்று - அந்தணரின் ஒழுக்கம் ஒன்றும், இம்
மூன்றுமே என்று மிக்க பெரியோர் உரை செய்வார் - (ஆகிய) இவை
மூன்றுமே என்று சிறந்த சான்றோர் செப்புவார்.
(வி-ரை.) ஆன்
: ன் : சாரியை. உயர்த்தல் : அடையாளமாக
வானிற் பறக்கும்படி உயர்த்திக் கட்டுதல். ஒன்பது கோள்கள் : ஞாயிறு,
திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது.
"வேதம் ஓதிய வேதியர்க் கோர்மழை
நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை
மாதர் கற்புடை மங்கையர்க் கோர்மழை
மாதம் மூன்று மழையெனப்
பெய்யுமே"
என்னும் விவேகசிந்தாமணியின் கருத்து இங்கு வந்துள்ளது.
(க-து.) அரசரும்,
அந்தணரும் மாதரும் ஒழுக்கந்தவறாது
இருப்பின் உலகியல் ஒழுங்காக நடைபெறும்.
25.
இதனை இதுகண்டு மகிழும்
தந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்ப
தவர்தந்த சந்ததி யதாம்!
சந்த்ரோ தயம்கண்டு பூரிப்ப துயர்வாவி
தங்குபைங் குமுத மலராம்! |
|
|
|
|