பக்கம் எண் :

42

களிகூர்வது இச் செகம் எலாம் என்பர் - விளங்கும் முறைதவறாத
அரசரைப் பார்த்து மகிழ்வது இந் நிலவுலகம் யாவும் என்று அறிஞர்
கூறுவர்.

     (வி-ரை.)
தாதாவினைக் கண்டு இரவலர்குழாம் ‘மகிழ்வது' என்னாது
‘சீர் பெறுவது' எனக் கூறியதானால், இரவலர் குழாம் வாளா மகிழ்வதோடு
நில்லாமற் பொருள் பெற்றுச் சீரும் பெறும் எனக் கூறினாராயிற்று. பசுமை
+ குமுதம் : பைங்குமுதம். போதவும் - சாலவும். ஆலித்தல் -
ஆரவாரித்தல்.

     (க-து.)
ஒருவர் பெற்ற மக்கள் முதலாக இங்குக் கூறப்பட்டவை
அனைத்தும் பெற்றோர் முதலாகக் கூறப்பட்ட உயர்ந்த பொருள்களைக்
கண்டு மகிழும்.


           26. ஆகாதவை

உள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசி
     உறவாடும் உறவும் உறவோ?
  உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோ
     றுண்டவர்க் கன்னம் ஆமோ?
தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவரு
     தக்கபயிர் பயிரா குமோ?
  தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்
     தானையும் தானை யாமோ?
விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வரு
     விருப்பமும் விருப்ப மாமோ?
  வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்
     மிக்கசீ வனமா குமோ?
அள்ளா திருங்கருணை யாளனே! தேவர்தொழும்
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!