27.
நற்பண்புக்கு இடமிலார்
வெறிகொண்ட
மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டு
வெங்காஞ் சொறிப்பு தலிலே
வீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்
மேவுமோ? மேவா துபோல்,
குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,
கூடவே இளமை உண்டாய்க்,
கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்க
குவலயந் தனில்அ வர்க்கு,
நிறைகின்ற பத்தியும் சீலமும் மேன்மையும்
நிதானமும் பெரியோர் கள்மேல்
நேசமும் ஈகையும் இவையெலாம் கனவிலும்
நினைவிலும் வராது கண்டாய்;
அறைகின்ற சுருதியின் பொருளான வள்ளலே!
அண்ணலே ! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அறைகின்ற
சுருதியின் பொருளான வள்ளலே -
புகழப்படுகின்ற மறையின் பொருளான கொடையாளியே!, அண்ணலே -
தலைவனே! அருமை...........தேவனே!, வெறி கொண்ட மற்கடம் - வெறி
பிடித்த ஒரு குரங்கு, பேய் கொண்டு - பேயாற் பிடிக்கப்பட்டு, கள்
உண்டு - (அதன்மேற்) கள்ளையுங் குடித்து, வெம் கரஞ்சொறிப் புதரில்
வீழ்ந்து - (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, தேள்
கொட்டிட - (அவற்றுடன்) தேளாலும் கொட்டப்பெற்றால், எள்ளளவும்
சன்மார்க்கம் மேவுமோ - (அக் குரங்குக்கு) சிறிதளவேனும் நன்னெறியிலே
செல்லும் நிலை உண்டாகுமோ? மேவாதுபோல் - (அவ்வாறு அக்
குரங்குக்கு நன்னெறி) தோன்றாததுபோல்), குறைகின்ற புத்தியாய் -
சிற்றறிவுடன், அதில் அற்ப சாதி
|
|
|
|