யாய்
- மேலும் இழிசெயலுடைய குலத்தினராய், கூடவே இளமை உண்டாய்
- அவற்றுடன் இளமைப் பருவமும் உடையவராய் (இருந்து) அவர்க்கு -
அவர்கட்கு, கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் - சிறிது
தலைமைப்பதவி கிடைத்தாலும், குவலயந்தனில் - உலகத்தில், நிறைகின்ற
பத்தியும் - நிறைந்த கடவுள் அன்பும், சீலமும் - ஒழுக்கமும், மேன்மையும்
- பெருந்தன்மையும், நிதானமும் - அமைதியும், பெரியோர்கள்மேல்
நேசமும் - அறிஞரிடம் நட்பும், ஈகையும் - கொடைப்பண்பும்,
இவையெலாம் நினைவிலும் கனவிலும் வராது - (ஆகிய) இவைகள் யாவும்
நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.
(வி-ரை.) சுருதி
- காதாற் கேட்கப்படுவது (வேதம்). காஞ்சொறி -
உடம்பிற் பட்டவுடன் தினவை உண்டாக்கும் ஒரு வகைப் பூடு. அற்பசாதி :
பிறருக்குப் பயன்படாமலும், தீமை செய்துகொண்டும், மற்றவரைத்
துன்புறுத்தியும் உயர்ந்த பண்பு பதியப்பெறாத பரம்பரை. இயல்பாகவே
குறும்பு செய்யும் குரங்கு வெறிகொண்டு பேய் பிடித்துக், கள்ளைக்
குடித்துத் தினவெடுத்துத் தேள் கொட்டுதலையும் பெற்றாற் செய்யும்
பிழைகள் போலவே, இயல்பாகவே சிற்றறிவுடைய பரம்பரையிலே
பிறந்தவர்க்கு இளமையும் தலைமைப்பதவியும் கிடைத்தால் தவறுகள்
செய்வார்களேயன்றி, நலம்புரியமாட்டார்கள். இவையெலாம் வராது :
ஒருமைப்பன்மை மயக்கம். கண்டாய் : முன்னிலையசைச்சொல்.
(க-து.) ‘அற்பருக்கு
வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிற் குடை
பிடிப்பர்.'
28. இவர்
இன்ன முறையர்
தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்து
தான்முடிப் போன்த மையன்ஆம்;
தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்
தாய்தந்தை யென்னல் ஆகும்;
ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோ
துதவுவோன் இட்ட தெய்வம்;
உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்
உரைப்பவன் குருஎன் னல்ஆம்;
|
|
|
|
|