பக்கம் எண் :

46

எந்நாளும் வரும்நன்மை தீமைதன தென்னவே
     எண்ணிவரு வோன்பந் துஆம்;
  இருதயம் அறிந்துதன் சொற்படி நடக்குமவன்
     எவன் எனினும் அவனே சுதன்
அந்நார மும்பணியும் எந்நாளு மேபுனையும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.)
அம் நாரமும் பணியும் எந்நாளுமே புனையும் அண்ணலே
- அழகிய நீரையும் (கங்கையையும்) பாம்பையும் எப்போதும் அணிந்துள்ள
பெரியோனே!, அருமை ...... தேவனே!, தன்னால் முடிக்க ஒண்ணாத
காரியம் வந்து முடிப்போன் தான் தமையன் ஆம் - தன்னாலே முற்றுவிக்க
இயலாத அலுவலை வந்து முற்றுவிக்கும் ஒருவன் தனக்கு முன்பிறந்தோன்
ஆவான், தன் தலைக்கு இடர் வந்தபோது மீட்டு உதவுவோன் தாய்
தந்தை என்னல் ஆகும் - தனக்குத் தலைபோகத்தக்க துன்பம்
உண்டானபோது அதிலிருந்து மீட்போன் அன்னையும் பிதாவும் ஆவான்,
ஒன்னார் செயும் கொடுமையால் மெலிவு வந்த போது உதவுவோன் இட்ட
தெய்வம் - பகைவர் செய்கின்ற தீமையால் நலிந்த காலத்தில்
துணையாவோன் வழிபடும் தெய்வம் ஆவான், உத்தி புத்திகள் சொல்லி
மேல்வரும் காரியம் உரைப்பவன் குரு என்னலாம் - (தொழில் செய்யும்)
முறைமையையும் அறிவுரையையும் ஊட்டி எதிர் காலத்தில் வரும்
பயனையும் மொழிபவனை ஆசிரியன் எனலாம், வரும் நன்மை தீமை
எந்நாளும் தனது என்ன எண்ணி வருவோன் பந்து ஆம் - வரக்கூடிய
நன்மை தீமைகளை எப்போதும் தனக்கு வந்தவைகளாக நினைத்துத்
(தன்னுடன் நட்புப்பூண்டு) வருவோன் உறவினன் ஆவான், இருதயம்
அறிந்து தன் சொற்படி நடக்கும் அவன் எவன் எனினும் அவனே சுதன் -
மனமறிந்து தன்