மொழி தவறாது
நடக்கின்றவன் எவனாயினும் அவனே மகன் ஆவான்.
(வி-ரை.) நாரம்
- நீர்; இங்குக் கங்கையை உணர்த்துகிறது. நன்மை
தீமை, தனது : ஒருமை பன்மை மயக்கம். (நன்மை தீமை தன்னுடையவை
என வருதல் வேண்டும்.) உத்தி : யுக்தி என்னும் வடமொழிச் சிதைவு.
ஒன்னார் : மனம் பொருந்தார்.
(க-து.) இயற்கையாக
உள்ளவரே அன்றி இங்குக்
கூறப்பட்டவர்களும் இம் முறையினர் ஆவர். அன்றி, இவ்வாறு
பயன்படாதவர்கள் இம்முறைக்குத் தகாதவர் எனினும் பொருந்தும்.
29. ஒழுகும்
முறை
மாதா
பிதாவினுக் குள்ளன் புடன்கனிவு
மாறாத நல்லொ ழுக்கம்;
மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உள
வார்த்தைவழி பாட டக்கம்;
காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
காலத்தில் நயபா டணம்;
கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்
கருணைசேர் அருள்வி தானம்;
நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக பயவினயம்;
நெறியுடைய பேர்க்கிங்கிதம்;
நேயம்உள தமர்தமக் ககமகிழ் வுடன்பரிவு
நேரலர் இடத்தில் வைரம்
ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்எம
தையனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) எமது ஐயனே - எம் தலைவனே!,
அருமை ...........
தேவனே!, மாதா பிதாவினுக்கு உள் அன்புடன் கனிவு மாறாத
நல்லொழுக்கம் - பெற்றோர்களிடம் உள்ளம்