புறப்பொருளாவது
மக்களுடைய வீரம், கொடை, ஒழுக்கம்
முதலியவற்றைக் குறிக்கும்.
சதம் - நூறு; சதகம் - நூறு கொண்டது, (1 : பிரத்தியயம்).
நூலாசிரியர்
இந்நூலின்
இறுதிச் செய்யுளில், ‘அம்பலவாண கவிராயனாகும்'
எனத் தம்மைக் குறிக்கிறார். இவர் சோழ நாட்டில்
தில்லையாடி என்னும்
ஊரில் வேளாளர் குலத்திற் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் பிறந்து,
சீகாழியில் தங்கியிருந்த - இராம நாடகம் பாடிய - சிறப்புப்பெற்ற
அருணாசலக் கவிராயரின் மூத்த புதல்வர்.
இவரை
ஆதரித்தவர்
இந்நூலின்
முடிவுதோறும்,
‘அருமை
மதவேள், அனுதினமும் மனதில்நினை
தருசதுர கிரிவளர் அறப்பளீ சுரதே வனே'
எனவும்,
முதற் செய்யுளில்,
‘மோழைபூ பதிபெற்ற அதிபன் எமதருமை மதவேள்'
எனவும்,
3ஆவது
செய்யுளில்,
‘நீதிசேர் அரசன் எமதருமை மதவேள்'
எனவும்,
7ஆவது செய்யுளில்,
‘கங்கா குலத்தலைவன் மோழைதரும் அழகன்
எமதருமை மதவேள்'
எனவும்,
10 ஆவது செய்யுளில்,
‘கற்பதரு வாகுமெம தருமை மதவேள்'
எனவும்,
47 ஆவது செய்யுளில்,
‘அவனிபுக ழருமை மதவேள்'
எனவும்,