73
ஆவது செய்யுளில்,
‘ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன்
ஆகும் எமதருமை மதவேள்' எனவும்,
குறிப்பிட்டிருப்பதால், இந்நூலாசிரியரை ஆதரித்தவர் வேளாளர் குலத்தைச்
சார்ந்த மோழை பூபதி யென்பவரின் புதல்வர் மதவேள் எனப்படுபவரென்றும்
அவர் சிறந்தவர் என்றும் கங்கை குலத்தவரென்றும் அறியலாம்.
இவர் (மதவேள்) கொல்லிமலையிலுள்ள குண்டுணி நாட்டுத்
தலைவராகிய கருமக் கவுண்டர் என்றும், இவர் தந்தையார் மோழைக்
கவுண்டர் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
நேரிசை
வெண்பா
உம்பர்கோன் எம்பெருமான் ஓங்கறப்ப ளீசுரன்மேற்
பைம்பொருள்சே ருஞ்சதகம் பாடவே - அம்புவியோர்
ஆக்கும் துதிக்கையான் அன்புடையார்க் கின்பருளிக்
காக்கும் துதிக்கையான் காப்பு.
|
(இதன்பொருள்)
உம்பர்கோன் எம்பெருமான் ஓங்கு
அறப்பளீசுரன்மேல் - வானவர் தலைவனும் எம் இறைவனுமாக உயர்ந்த
அறப்பள்ளி யென்னுந் தலத்தில் எழுந்தருளிய இறைவனைக் குறித்து,
பைம்பொருள் சேரும் சதகம் பாட - புதிய பொருள் அமைந்த சதகத்தைப்
பாடுவதற்கு, அம்புவியோர் ஆக்கும் துதிக்கையான் - உலகத்தவர் செய்யும்
வாழ்த்துக்களை உடையவனும், அன்புடையார்க்கு இன்பு அருளிக் காக்கும்
துதிக்கையான் - அன்புடையவர்களுக்கு இன்பத்தையீந்து காப்பாற்றும்
தும்பிக்கையனும் (ஆகிய) மூத்த பிள்ளையார், காப்பு - காவல்.
(விளக்கவுரை)
அறப்பள்ளி - சதுரகிரியிலுள்ள சிவநகர். அம்பர்
இம்பர் உம்பர் என்பவை சுட்டடியாகப் பிறந்த இடங்கள். உம்பர் - மேலிடம்;
வானுலகம். அங்குள்ளோரையும் உம்பர் என்றது இடவாகுபெயர். துதிக்கை -
துதித்தல் (தொழிற்பெயர்); யானையின்கை. காப்பு; தொழிற்பெயர்.
|