பக்கம் எண் :

4

            1. உயர் பிறப்பு

கடலுலகில் வாழும்உயிர் எழுபிறப் பினுள்மிக்க
     காட்சிபெறு நரசன் மமாய்க்
  கருதப் பிறத்தலரி ததினும்உயர் சாதியிற்
     கற்புவழி வருதல் அரிது;
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது
     வருதலது தனினும் அரிது;
  வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்றெண்ணி
     மாசில்வழி நிற்றல் அரிது;
நெடியதன வானாதல் அரிததின் இரக்கம்உள
     நெஞ்சினோன் ஆதல் அரிது;
  நேசமுடன் உன்பதத் தன்பனாய் வருதல்இந்
     நீள்நிலத் ததினும் அரிதாம்;
அடியவர்க் கமுதமே! மோழைபூ பதிபெற்ற
     அதிபன்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அடியவர்க்கு அமுதமே - அடியவர்களின் துன்பத்தை
நீக்குபவனே!' மோழை பூபதி பெற்ற அதிபன் - மோழை எனப்படும்
தலைவன் ஈன்ற தலைவன், எமது அருமை மதவேள் - எம் அரிய
மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில்
வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில்
எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!' கடல் உலகில் வாழும் எழுபிறப்பு
உயிர்களுள் - கடலாற் சூழப்பட்ட நிலத்தில் வாழ்கின்ற எழுவகையாகத்
தோன்றிய உயிர்களுள்; மிக்க காட்சிபெறு நரசன்மமாய்க் கருதப் பிறத்தல்
அரிது - மிகுந்த அறிவையுடைய மக்கட்பிறப்பாய் நினைக்குமாறு பிறப்பது
அருமை, அதினும் உயர் சாதியில் கற்புவழி வருதல் அரிது - அப்
பிறப்பினுள்ளும் உயர்குண