முடைய இனத்திலே
கற்பொழுக்கமுடைய மரபிலே தோன்றுதல் அருமை,
அதுதனினும் வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது வருதல்
அரிது - அவ்வாறு பிறப்பவர்களுள்ளும் அழகுடன் உறுப்புக் குறையாமலும்
பிழை இல்லாமலும் பிறப்பது அருமை, வந்தாலும் இது புண்யம் இது பாவம்
என்று எண்ணி மாசு இல்வழி நிற்றல் அரிது - அவ்வாறு பிறப்பினும் இது
நன்று இது தீது என நினைத்துக் குற்றமில்லாத நெறியில் நிற்றல் அருமை,
நெடிய தனவான் ஆதல் அரிது - (அதனினும்) பெரிய செல்வனாவது
அருமை, அதின் இரக்கம் உள நெஞ்சினோன் ஆதல் அரிது - அதனினும்
அருட்பண்புடைய உளத்தோன் ஆவது அருமை, அதினும் உன்பதத்து
நேசமுடன் அன்பனாய் வருதல் இந் நீள்நிலத்து அரிது, ஆம் - அதனினும்
உன் திருவடிகளிலே அன்புதவழும் அடியவனாக வருதல் இப் பேருலகிலே
அருமையாகும்.
(வி-ரை.) எழுவகைப்பிறப்பு:
வானவர், மக்கள், விலங்கு, பறவை,
ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம். பூ - உலகம், பதி - தலைவன்.
பூபதி - அரசன்; தங்களுக்கு உதவிய வள்ளல்களைப் பூபதி யென்று
புகழ்தல் அக்காலப் புலவர் வழக்கம்.
(கருத்து) அறிவுடைய
மக்கட் பிறப்பாகப் பிறந்து அழகு, செல்வம்,
ஒழுக்கம், கடவுள் வழிபாடுகள் உடையவராக இருப்பது அருமை.
2.
இல்லாளின் சிறப்பு
கணவனுக் கினியளாய், ம்ருதுபாஷி யாய், மிக்க கமலைநிகர்
ரூப வதியாய்க்,
காய்சினம் இலாளுமாய், நோய்பழி யிலாததோர்
கால்வழியில் வந்த வளுமாய்,
மணமிக்க நாணம்மடம் அச்சம் பயிர்ப்பென்ன
வரும்இனிய மார்க்க வதியாய்,
மாமிமா மற்கிதம் செய்பவளு மாய், வாசல்
வருவிருந் தோம்பு பவளாய், |
|
|
|
|