இணையில்மகிழ்
நன்சொல்வழி நிற்பவளு மாய்வந்தி
என்பெயர் இலாத வளுமாய்,
இரதியென வேலீலை புரிபவளு மாய்ப்பிறர்தம்
இல்வழி செலாத வளுமாய்,
அணியிழை யொருத்தியுண் டாயினவள் கற்புடையள்
ஆகும்;எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.) எமது ............ தேவனே!
கணவனுக்கு இனியளாய் - கணவன்
பார்வைக்கு அழகியவளாய், மிருது பாஷியாய் - இன்மொழி யுடையவளாய்,
கமலை நிகர்மிக்க ரூபவதியாய் - திருமகளைப்போலச் சாலவும் அழகியாய்,
காய்சினம் இலாதவளுமாய் - வெறுக்கத்தக்க கோபம் இல்லாதவளாய்,
நோய்பழி இல்லாதஓர் கால்வழியில் வந்தவளுமாய் - நோயும் இழிவும்
இல்லாத ஒப்பற்ற மரபிலே பிறந்தவளாய், மணம்மிக்க நாணம் மடம்
அச்சம் பயிர்ப்பு என்ன வரும் இனிய மார்க்க வதியாய் - புகழத்தக்க
நான்கு பண்புகளும் பொருந்திய நல்லொழுக்கமுடையவளாய், மாமி
மாமற்கு இதம் செய்பவளுமாய் - மாமிக்கும் மாமனுக்கும் நலம் புரிபவளாய்,
வாசல்வரு விருந்து ஓம்புபவளாய் - வாயிலில் வரும் விருந்தினரை
ஆதரிப்பவளாய், இணைஇல் மகிழ்நன் சொல்வழி நிற்பவளுமாய் - ஒப்பற்ற
கணவன் மொழிப்படி நடப்பவளாய், வந்தி என் பெயர் இல்லாதவளுமாய் -
மலடியெனும் பெயரில்லா தவளாய், இரதியெனவே லீலை புரிபவளுமாய் -
இரதியைப்போல இன்பக்கலவி செய்பவளாய், பிறர்தம் இல்வழி
செலாதவளுமாய் - மற்றவருடைய வீட்டுவழி செல்லாதவளாய்,
அணியிழைஒருத்தி உண்டாயின் - அழகிய அணிகலன்களையுடைய ஒரு
மங்கை இருந்தால், அவள் கற்பு உடையளாகும் - அவள் கற்புடையவள்
எனப்படுவாள்.
(வி-ரை.) இரதியென
லீலை புரிதலும், மகிழ்நன் சொல் வழி
நிற்றலும் பிற்கூறப்பட்டன வாதலால் முதலிற்கூறிய
|
|
|
|