பக்கம் எண் :

50

வணங்குவார், நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின் நன்றாகவே
பேசிடார் - இன்பதுன்பங்களுக்கு உட்பட்ட உறவினர் வந்தால் மனம்
விட்டுப் பேசமாட்டார், ஒப்பாரியாய் வந்த புது உறவுக்கு நாளும் பல
நன்மை செய்வார் - ஒப்புக்கு வந்த புதிய உறவினர்க்கு எப்போதும்
பலவகை நலங்களும் புரிவர், அட்ட திசை சூழ் புவியில் ஓங்கு கலி
மகிமை - (இவை) எட்டுத் திக்குகள் சூழ்ந்த உலகில் கலியுகத்தின்
பெருமை.

     (வி-ரை.) கவி - கவிபாடும் புலவன். இட்டம் : இஷ்டம் என்பதன்
தற்பவம். அட்டம் என்பதும் அஷ்டம் என்பதன் தற்பவம். கறுப்பு - பேய்
(உலகவழக்குச்சொல்); ‘பேய்' என்பதும் ‘பே' என்னும்
(அச்சப்பொருளைத்தரும்) உரிச்சொல்லின் திரிபே ஆகும். துர்ச்சனர் (வட)
- தீயர்.

     (க-து.) இக்காலத்தில் மக்களுக்கு அறியாமை மிகுந்துளது.

         31. குணங்காணும் குறி

கற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும்
     கனவாக்கி னாற்கா ணலாம்;
  கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடு
     கால்நடையி னும்கா ணலாம்;
அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாரா
     அடக்கத்தி னால்அ றியலாம்;
  அறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலை
     யதுகண்டு தான் அறியலாம்;
வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு துடியினால்
     விளையும்என் றேஅ றியலாம்;
  வீரம்உடை யோரென்ப தோங்கிவரு தைரிய
     விசேடத்தி னால்அ றியலாம்;
அத்தா! குணத்தினாற் குலநலம் தெரியலாம்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!