(இ-ள்.)
அத்தா
- தலைவனே!, அண்ணலே - பெரியோனே!,
அருமை ........., தேவனே!, சீலமுடனேசொல்லும் கனவாக்கினால் கற்றோர்கள்
என்பதைக் காணலாம் - ஒழுக்கமுடன் பேசும் உயர்ந்த மொழியினாற்
படித்தவர்கள் என்பதை அறியலாம், பார்க்கின்ற பார்வையொடு
கால்நடையினும் கற்பு உளார் என்பதைக் காணலாம் - நோக்கும்
நோக்கத்தினாலும் காலின்நடையினாலும் கற்பு உடையபெண்கள் என்பதை
அறியலாம், ஒன்றினும் வாரா அடக்கத்தினால் அற்றோர்கள் என்பதை
அறியலாம் - எதனிலும் (தாமே பெரியவர் என்று) வராத அடக்கமான
பண்பினால் (தற்பெருமை) அற்றவர்கள் என உணரலாம் பூததயை என்னும்
நிலையது கண்டுதான் அறம் உளோர் என்பதை அறியலாம் - உயிர்களிடம்
இரக்கம் என்னும் நிலையைக் கண்டுதான் அறநெறியாளர் என உணரலாம்,
கிளைத்துவரு துடியினால் வித்துஓங்கு பயிரை விளையும் என்றே
அறியலாம் - கிளைத்துவரும் செழிப்பினால், விதையிலிருந்து வளரும்
பயிரை விளையும் என்று உணரலாம், ஓங்கிவரு தைரிய விசேடத்தினால்
வீரம் உடையோர் என்பதை அறியலாம் - மேம்பட்டு வரும் அஞ்சாமைச்
சிறப்பினால், வீரம் உடையோர் என உணரலாம்.
(க-து.)
ஒருவருடைய
செயலினால் அவர் பண்பை அறியலாம்.
32.
கூடிற் பயன்படல்
செத்தைபல
கூடியொரு கயிறாயின் அதுகொண்டு
திண்கரியை யும்கட் டலாம்!
திகழ்ந்தபல துளிகூடி ஆறாயின் வாவியொடு
திரள்ஏறி நிறைவிக் கலாம்!
ஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்
உடுத்திடும் கலைஆக் கலாம்!
ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்
உயர்கவிகை யாக்கொள் ளலாம்!
|
|