(வி-ரை.)
அற்ற கனியைப் பொருத்தல்
: பாண்டவர்கள் காட்டில்
வாழும்போது ஒரு முனிவர்க்குப் பயன்படும் நெல்லிக்கனி ஒன்றை
அருச்சுனன் பாஞ்சாலிக்காக அறுத்துவிட்டான். பிறகு, உண்மையுணர்ந்து
கண்ணனை வேண்டினர். அவர் பாண்டவர்கள் ஒவ்வொருவரும்
உண்மையான மனத்தில், ‘உற்றது கூறின் அற்றது பொருந்தும்' என்றனர்.
அவர்கள் அவ்வாறே கூறியவுடன் அப் பழம் மரத்திற் பொருந்தியது.
தண்டுலம் - அரிசி. ‘பலதுளி பெருவெள்ளம்.'
(க-து.)
ஒற்றுமையாக எதனைச் செய்தாலும்
வெற்றியுண்டு
33. வெற்றி
யிடம்
கலைவலா
ருக்கதிக சயம் மதுரவாக்கிலே;
காமுகர்க் கதிக சயமோ
கைப்பொருளி லே;வரும் மருத்துவர்க் கோசயம்
கைவிசே டந்தன் னிலே;
நலமுடைய வேசையர்க் கழகிலே! அரசர்க்கு
நாளும்ரண சூரத் திலே
நற்றவர்க் கதிகசயம் உலகுபுகழ் பொறையிலே;
ஞானவே தியர்த மக்கோ
குலமகிமை தன்னிலே; வைசியர்க் கோசயம்
1கூடிய துலாக்கோ லிலே;
குற்றம் இல்லாதவே ளாளருக் கோசயம்
குறையாத கொழுமு னையிலே;
அலைவில்குதி ரைக்குநடை வேகத்தில் அதிகசயம்
ஆம்என்பர்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
அருமை ......... தேவனே!,
கலைவலாருக்கு மதுரவாக்கில்
அதிகசயம் - கலையிற் சிறந்தவர்கட்கு இனிய மொழியிலே மிகு வெற்றி
(உண்டு), காமுகர்க்குக் கைப்பொருளிலே அதிகசயம் - காமத்திலே
ஈடுபட்டவர்கட்குக்
1.
‘கூறிய' என்றும் பாடம்.
|