பக்கம் எண் :

54

கைப்பொருளாலே மிகு வெற்றி (உண்டு). வரும் மருத்துவர்க்குக்
கைவிசேடந்தன்னில் சயம் - முன்னுக்கு வரும் மருத்துவர்களுக்குக்
கைராசியால் வெற்றி (உண்டாகும்), நலம் உடைய வேசையர்க்கு அழகிலே
- நன்மையுடைய பரத்தையர்க்குத் தங்கள் அழகினாலே (வெற்றியுண்டு),
நாளும் அரசர்க்கு ரணசூரத்திலே - எப்போதும் மன்னவர்கட்குப்
போர்க்களத்திலே (அதிக வெற்றியுண்டு), நற்றவர்க்கு உலகுபுகழ்
பொறையிலே அதிக சயம் - நல்ல தவத்தினர்க்கு உலகம் புகழும்
பொறுமையினாலே மிகுவெற்றி (உண்டாகும்), ஞானவேதியர் தமக்கோ
குலமகிமை தன்னிலே - அறிஞரான மறையவர்களுக்கோ தம் மரபுக்குரிய
பெருமையினாலே வெற்றி உண்டாகும், வைசியர்க்கோ கூடிய
துலாக்கோலிலே சயம் - வணிகர்களுக்குப் புகழ்பெற்ற தராசுக்கோலை
ஒழுங்காகப் பிடிப்பதனாலே வெற்றி (உண்டாகும்), குற்றம் இல்லாத
வேளாளருக்கோ குறையாத கொழுமுனையிலே சயம் - குற்றம்
அற்றவர்களான வேளாளர்க்கு நிறைவுற்ற கொழுவின் நுனியினாலே
(உழுவதால்) வெற்றி உண்டாகும், அலைவுஇல் குதிரைக்கு நடைவேகத்தில்
அதிக சயம் ஆம் என்பர் - வருத்தம் இல்லாத குதிரைக்கு அதனுடைய
நடைவிரைவினால் மிகு வெற்றியுண்டாகும் என்று (அறிஞர்) உரைப்பர்.

     (க-து.) அவரவர்கள் தம் தொழில் முறையிலேதான்
வெற்றியுண்டாகும்.

  34. ஒன்றின் இல்லாமையாற் பாழ்படல

தாம்பூல தாரணம் இலாததே வருபூர்ண
     சந்த்ரன்நிகர் முகசூ னியம்!
  சற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்துவாழ்
     தரும்பெரிய நகர்சூ னியம்!
மேம்பா டிலாதமன் னவர்கள் வந்தாள்வதே
     மிக்கதே சச்சூ னியம்!
  மிக்கசற் புத்திரன் இலாததே நலமான
     வீறுசேர் கிருகசூ னியம்!