39.
மறைவும் வெளிப்படையும்
சென்மித்த
வருடமும், உண்டான அத்தமும்,
தீதில்கிர கச்சா ரமும்,
தின்றுவரும் அவுடதமும், மேலான தேசிகன்
செப்பிய மகாமந்த் ரமும்,
புன்மையவ மானமும், தானமும், பைம்பொன்அணி
புனையும்மட வார்க லவியும்,
புகழ்மேவும் மானமும், இவைஒன்ப தும்தமது
புந்திக்கு ளேவைப் பதே
தன்மமென் றுரைசெய்வர்; ஒன்னார் கருத்தையும்
தன்பிணியை யும்ப சியையும்,
தான்செய்த பாவமும், இவையெலாம் வேறொருவர்
தஞ்செவியில் வைப்ப தியல்பாம்!
அன்மருவு கண்டனே! மூன்றுலகும் ஈன்றவுமை
அன்பனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.)
அல்மருவு கண்டனே - (நஞ்சு தங்கியதால்) கருமை
பொருந்திய கழுத்தை உடையவனே!, மூன்று உலகும் ஈன்ற
உமைஅன்பனே - மூவுலகத்தையும்பெற்ற உமையம்மையார் காதலனே!,
அருமை ....... தேவனே!, சென்மித்த வருடமும் - பிறந்த ஆண்டும்,
உண்டான அத்தமும் - கிடைத்திருக்கும் செல்வமும், தீதுஇல் கிரகச்
சாரமும் - குற்றமற்ற நல்ல கோள்களின் பலனும், தின்றுவரும் ஒளடதமும்
- உண்டுவரும் மருந்தும், மேலான தேசிகன் செப்பிய மகாமந்திரமும் -
உயர்ந்த ஆசான் கூறியருளிய உயர்ந்த மறையும், புன்மை அவமானமும் -
(தனக்கு நேர்ந்த) இழிவாகிய மானக்கேடும், தானமும் - (தான் பிறர்க்குக்
கொடுத்த) கொடையும் பைம்பொன் அணிபுனையும் மடவார்
கலவியும் - புதிய
|