பொன்னாலான அணிகளை
அணிந்த பெண்களின் சேர்க்கையும்,
புகழ்மேவும் மானமும் - புகழ்பொருந்திய பெருமையும், இவை ஒன்பதும் -
(ஆகிய) இவைகள் ஒன்பதினையும், தமது புந்திக்குள் வைப்பதே தன்மம்
என்று உரைசெய்வர் - தம்முடைய மனத்தில் வைத்திருப்பதே அறமாகும்
என்று அறிஞர் கூறுவர். (பிறரிடம் கூறுதல் பிழை), ஒன்னார் கருத்தையும் -
பகைவரின் நினைவையும், தன் பிணியையும் - தன் நோயையும், பசியையும்
- (தன்) பசியையும், தான்செய்த பாவமும் - தான் இயற்றிய பாவத்தையும்,
இவையெலாம் - (ஆகிய) இவைபோன்றவற்றை, வேறு ஒருவர்தம் செவியில்
வைப்பது இயல்பாம் - மற்றொருவர் காதில் விழச்செய்வது (அறத்தின்)
இயற்கையாகும். (மறைத்துவைப்பது நலமாகாது)
(வி-ரை)
தான்
செய்த பாவத்தைச் சொல்லவேண்டும். எனவே, தான்
செய்தநன்றியைச் சொல்லக்கூடாது என்று அறியலாகும். தானம் என்பது
அதனைக் குறிக்கும் என்றும் கொள்ளலாம் பாவத்தைக் கூறினால் மேலும்
பாவஞ்செய்தல் ஆகாது என்ற மனஉறுதி உண்டாகும். அல் - இருள்;
இங்குக் கருமையை உணர்த்துகிறது.
(க-து.)
தான் பிறந்த
ஆண்டு முதலானவற்றைக் கூறுவது தனக்கே
கெடுதியை உண்டாக்கும் பகைவரின் நினைவு முதலானவற்றைக்
கூறுவதனால் நன்மையாகும்.
40.
வானவர்
கால அளவை
சதுர்யுகம்
ஓரிரண் டாயிரம் பிற்படின்
சதுமுகற் கொருதின மதாம்!
சாற்றும்இத் தினமொன்றி லேயிந்த்ர பட்டங்கள்
தாமும்ஈ ரேழ்சென் றிடும்!
மதிமலியும் இத்தொகையின் அயன்ஆயுள் நூறுபோய்
மாண்டபோ தொருகற் பம்ஆம்!
மாறிவரு கற்பம்ஒரு கோடிசென் றால்நெடிய
மால்தனக் கோர்தி னமதாம்!
|
|