தையர் தமக்கும்
- தீட்டுற்ற (பூப்படைந்த) பெண்களுக்கும், தாம்பிரம்
அதற்கும் - தாம்பிரத்திற்கும், மிகு வெள்ளி வெண்கலம் அயம் தங்கம் ஈயம்
தமக்கும் - அதிக வெள்ளிக்கும் வெண்கலத்திற்கும் இரும்புக்கும்
பொன்னுக்கும் ஈயத்தினுக்கு், புமனிதம்
தரும் - தூய்மையைத் தருகிற,
வருபெருக்கொடு புளி சுணம் சாம்பல் சாரும் மண்தாது சாணம் இவை
புனிதம் ஆம்என்பர் - வருகின்ற வெள்ளத்துடன் புளியும், சுண்ணப்பொடியும்
சாம்பலும், பொருந்திய மண்ணும், காவிக்கல்லும், சாணமும் ஆகிய இவைகள் (முறையே) தூய்மை
தரும் என்று (அறிஞர்) கூறுவர்.
(வி-ரை.)
‘வாவும்பரி'
‘வாம்பரி' என இடைக்குறைந்தது. வாவுதல் -
தாவுதல். ஆசௌசம் : தீட்டு.
(க-து.)
சில பொருள்களை
இங்குக் கூறியவாறு தூய்மை செய்தல்
உலகியல்.
42.
அடங்காதவற்றை அடக்குவதற்கு வழி
கொடியபொலி
எருதைஇரு மூக்கிலும் கயிறொன்று
கோத்துவச விர்த்தி கொள்வார்;
குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்
கொண்டுவச விர்த்தி கொள்வார்;
படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்
பற்றிவச விர்த்தி கொள்வார்;
பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடை
பழக்கிவச விர்த்தி கொள்வார்;
விடமுடைய துட்டரைச் சோர்பந்து கைக்கொண்டு
வீசிவச வீர்த்தி கொள்வார்;
மிக்கபெரி யோர்களும் கோபத்தை அறிவால்
விலக்கிவச விர்த்தி கொள்வார்;
அடியவர் துதிக்கவரு செந்தா மரைப்பதத்
தையனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
|